உக்ரைன் துணை பிரதமர் ட்வீட் போட்ட 10 மணி நேரத்தில் உதவி.. எலான் மஸ்க்கிற்கு குவியும் பாராட்டுகள்
கீவ்: செயற்கைகோள் மூலம் உக்ரைன் நாட்டுக்கு இணைய சேவையை தனது ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க் கொடுத்து வருகிறார்.
Recommended Video
நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பையும் மீறி உக்ரைன் முயன்று வந்தது. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. மூன்றாம் உலக போர் எனும் சொல்லும் அளவுக்கு மிகுந்த நாசவேலைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

நீர் மின் நிலையங்கள்
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள நீர் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்களை ரஷ்யா தகர்த்துவிட்டது. இதனால் அங்கு மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளவர்கள் உணவுக்காகவும் நீருக்காகவும் போராடுகிறார்கள்.

இணையதள சேவை
மேலும் தொலைத் தொடர்பு சாதனங்களும் துவம்சம் செய்யப்பட்டுவிட்டதால் மக்கள் போனில் பேசவும் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியாமல் தவிக்கிறார்கள். தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இணைய சேவை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் உறவினர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ், எலான் மஸ்கிடம் இணையதள சேவை குறித்து கேட்டார்.

எலான் மஸ்க்
அந்த ட்வீட்டில், நீங்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடியேற முயற்சித்து வரும் நிலையில் ரஷ்யாவோ உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. பூமியிலிருந்து விண்ணுக்கு உங்கள் ஸ்பேக் எக்ஸ் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக செல்கின்றன. ஆனால் ரஷ்ய நாட்டின் ராக்கெட்டுகள் உக்ரைன் அப்பாவி மக்களை தாக்குகிறது.

ஸ்டார்லிங்க்
எனவே உக்ரைன் மக்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது ட்விட்டரில் கேட்டுக் கொண்டார். இதையடுத்து உலக பணக்காரரான எலான் மஸ்க் உக்ரைனுக்கு உதவ முன்வந்தார். ஸ்பேக் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க மூலம் செயற்கைகோள் இணையதள சேவையை கொடுத்து வருகிறார்.

10 மணி நேரத்தில் எலான் மஸ்க் உதவி
இதை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் துணை பிரதமர் உதவி கேட்ட 10 மணி நேரத்தில் இந்த சேவையை வழங்கியது. உலகம் முழுவதும் இணைய சேவை கொடுக்கும் நோக்கத்துடன் ஸ்டார்லிங்கிற்கு சொந்தமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இயங்கி வருகின்றன. இதற்கு எலான் மஸ்கிற்கு உக்ரைன் துணை பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது ஸ்டார்லிங்கின் இணையதள சேவை உக்ரைனில் இயங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications