பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) வெளியேற்றம் உலக வெப்பமாதலுக்கு பங்காற்றுவதால், வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுவின் ஒரு பகுதியான இதனை தொழில்நுட்பங்கள் மூலம் அகற்றிவிட்டால், உலக வெப்பமாதல் தாமதப்படும் தானே?

பெண் தூக்கம்
Getty Images
பெண் தூக்கம்

உங்களுடைய மென்மையான மெத்தையில், பஞ்சு போன்ற தலையணைகள் மீது இன்று உங்களுடைய படுக்கையில் தூங்கும்போது, நீங்கள் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு உதவலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கார்பன் டை ஆக்ஸைடை காற்றிலிருந்து பிரித்து எடுத்து, அன்றாடம் நாம் வீடுகளில், தெருக்களில் பயன்படுத்தும் பொருட்களின் மூலப்பொருட்களில் அடைத்து கொள்ளலாம் என்பதே இதற்கு காரணமாகும்.

பிளாஸ்டிக் செய்கின்ற முழு செய்முறையிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

குளிர்சாதனப் பெட்டியிலுள்ள உறைநிலை பெட்டி, காரில் வண்ணம் அடிப்பது, உங்கள் காலணிகள், நீங்கள் இதுவரை வாசிக்காத புதிய புத்தகத்தை பையின்ட் செய்த அட்டை ஆகியவற்றில் கார்பன் டை ஆக்ஸைடை அடைத்து வைக்கலாம்.

உங்களுடைய தெருவிலுள்ள காங்கிரீட் கூட கார்பன் டை ஆக்ஸைடை அடைத்து வைக்கக்கூடிய பொருளாக மாறலாம்.

வேதிவினை புரியாத கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை பல பிளாஸ்டிக்குகளை செய்ய பயன்படும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கச்சா பொருட்களோடு வேதிவினைபுரிய செய்யும் வழிமுறையை ஐக்கிய ராஜ்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்ற எக்கோனிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இத்தகைய வினையூக்கி வடிவத்தில், பிளாஸ்டிக்கை தயாரிக்க தேவைப்படும் பொருட்களில் 50 சதவீத பொருளாக கார்பன் டை ஆக்ஸைடை உருவாக முடியும். இந்த வழிமுறை மூலம் காற்றில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடை மறுசுழற்சி செய்யலாம். இவ்வாறு மறுசுழற்சி செய்வதால் புதிதாக கார்பன் டை ஆக்ஸைடுவெளியேறும் அளவும் குறைகிறது.

2026 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் தயாரிக்கப்படும் போலியோலில் (பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் தொகுதிகள்) குறைந்தது 30 சதவீதத்தை உருவாக்குவதாக இந்த தொழில்நுட்பம் அமையும்.

இது ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் 3.5 மில்லியன் டன்னை குறைக்கும் என்று எக்கோனிக் டெக்னாலஜிஸின் செயலதிகாரி ரோவெனா செல்லன்ஸ் விளக்குகிறார்.

இது சாலையில் ஓடுகின்ற 2 மில்லியன் கார்களை அகற்றிவிடுவதற்கு சமமாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு தொழில்துறை கூட்டாளிகளோடு இந்த நிறுவனம் தற்போது ஆய்வுசெய்து வருகிறது.

கார்பன் டை ஆக்ஸைடை மறுசுழற்சி செய்யும் கனடா நிறுவனமான காபன்குயர் டெக்னாலஜிஸ், அதனை காங்கிரிட்டின் உள்ளே செலுத்தி பயன்படுத்தி வருகிறது.

உரம் தயாரிப்பு போன்ற தொழில்துறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை எடுத்துக்கொள்ளும் கார்பன்குயர் நிறுவனம், குறிப்பிட்ட அளவு திரவ வாயுவை காங்கிரீட் ட்ரக் அல்லது கலவையில் செலுத்துகிறது.

இதனால் உருவாகும் வேதிவினையால், காங்கிரீட்டில் நிரந்தரமாக தங்கிவிடும் கால்சியம் கார்போனேட் துகள்கள் உருவாகி, இந்த காங்கிரீட்டை 20 சதவீதம் அதிக வலுவானதாக மாற்றுகிறது.

இன்று கனடா, அமெரிக்கா முழுவதும் 60 காங்கிரீட் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ள கார்பன்குயரின் தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான கட்டுமானப் பணித்திட்டங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.

'கார்பன் என்ஜினியரிங்' என்கிற இன்னொரு நிறுவனம் கார்பன் டை ஆக்ஸைடை அடைத்து டீசல் மற்றும் விமான எரிபொருள் தயாரிக்க பயன்படுத்துகிறது.

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள 'கார்பன் கிளீன் சொலூசன்ஸ்' நிறுவனம் அனல் மின்நிலையத்தில் இருந்து வருகின்ற கார்பன் டை ஆக்ஸைடை அடைத்து உரங்கள், செயற்கை சலவைப்பொருட்கள் மற்றும் டைகளில் ஒரு பகுதியாக அமையும் சோடா சாம்பலாக (சோடியம் கார்போனைட்) மாற்றுகிறது.

ஆனால், இவ்வாறு கார்பனை பொருட்களில் அடைத்து பயன்படுத்துவது அதிக பயன்களை வழங்குமா?

எளிமையாக சொல்ல வேண்டுமானால். "பசுங்குடில் வாயுக்களின்" - கார்பன் டை ஆக்ஸைடு நிலைகளில். மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை மிகவும் முக்கியமானவை. நாம் மின்சாரம் தயாரிக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும். பிற மனித செயல்பாடுகளுக்காகவும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைப்படிவ எரிபொருட்களை பயன்படுத்தி வருவதால், இந்த பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து தொழில்துறை காலத்திற்கு முந்தைய 2 செல்ஸியஸ் அளவுக்குள் உலக வெப்பநிலையை பாராமரிப்பதற்கு முயல வேண்டுமென 195 நாடுகள் ஒப்பு கொண்டன.

ஆனால். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைவதற்கு ஆண்டுக்கு 12 முதல் 14 கிகா டன்கள் மூலம் சுமார் 70 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை நாம் குறைக்க வேண்டியுள்ளது என்று ஐநாவின் சுற்றுச்சூழல் மற்றும் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டு பணித்திட்டத்தின் இயக்குநர் ஜான் கிறைஸ்டன்சென் கூறியுள்ளார்.

கழிவுகள்
Getty Images
கழிவுகள்

ஒரு பில்லியன் டன்கள் அடங்கியதுதான் ஒரு கிகா டன்.

இதற்கு மாறாக, 2026 ஆம் ஆண்டுக்குள் தங்களுடைய தொழில்நுட்பம் ஆண்டுக்கு 3.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை குறைப்பதற்கு காரணமாகும் என்று எக்கோனிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

தங்களுடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடுத்தர காங்கிரீட் தயாரிப்பு ஆலை ஆண்டுக்கு 900 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்கலாம் என்பதை கார்பன்குயர் நிறைவேற்றி காட்டியுள்ளது.

உலக அளவில், காங்கிரீட் தொழில்துறை ஆண்டுக்கு 700 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை குறைக்கலாம் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.

"இத்தகைய பல தெரிவுகள் எழுவது மிகவும் நல்லது. ஆனால், கடினமான பிரச்சனைக்கு எளிய தீர்வு இல்லை. ஒரு தீர்வு என்பதும் இல்லை. என்று கிறைஸ்டன்சென் கூறுகிறார்.

கார்பன் வெளியேற்றம் குறைந்த பொருளாதாரமாக சமூகம் மாறும் அடிப்படை உருமாற்றத்தை, கார்பனை பொருட்களில் அடைகின்ற இத்தகைய தொழில்நுட்பங்கள் தாமதப்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் ஆவலர்கள் கவலையடைந்துள்ளனர்.

குறைவான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் பிளாஸ்டிக் ஆலை சுற்றுச்சூழலுக்கும் இன்னும் உகந்ததல்ல என்று விவாதம் தொடர்கிறது.

கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உதவுகின்ற புதிய தொழில்நுட்பங்களிலும். அணுகுமுறைகளிலும் ஆய்வு மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. புதைப்படிவ எரிபொருட்களை நாம் சார்ந்து இருக்கின்ற பிரச்சனையின் வேரை சமாளிப்பதற்கான செயல்பாட்டை தாமதப்படுத்துகின்ற சாக்குப்போக்காக இது மாறிவிடக் கூடாது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் கிரீன்பீஸின் தலைமை விஞ்ஞானி டொங் பார் கூறுகிறார்.

"கார்பன் வெளியேறத்தை குறைக்கின்ற ஒரு செயல்முறை அல்லது செயல்திறனை அதிகரிப்பது, மேம்பட்ட பசுமையான தெரிவுகளால் தொழில்துறை பராமரிக்கப்படுவதில் இருந்து நம்மை முடக்கிவிட முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கார்பன் டை ஆக்ஸைடை பொருட்களில் அடைவிடும் இத்தகைய தொழில்நுட்பங்கள் மிக சிறிய அளவானதாக இருப்பதால், அதிக செலவாகும் நுட்பங்களாக உள்ளன என்ற கிறைஸ்டன்சென் சுட்டிக்காட்டுகிறார்.

பிற செய்திகள்

"மேம்பாடுகள் நேர்மறையானதாக இருந்தாலும், நமக்கு தேவைப்படுவதிலிருந்து மிகவும் தெலைவான நிலையிலேயே இது உள்ளது" என்று அவர் வாதிடுகிறார்.

மறுசுழற்சி செய்யப்பட்ட கார்பனை கொண்டு என்ன செய்வது என்ற இன்னொரு சவாலும் இதிலுள்ளது. நிலத்திற்கு அடியில் அல்லது பெருங்கடலின் ஆழத்தில் புதைத்துவிடலாம் என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அதன் பின்விளைவுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

எனவே. காற்று, நீர் மற்றும் சூரிய சக்தி போன்ற தொடவல்ல சக்திகளை பயன்படுத்துவதை அதிகரிப்பதன் மூலம் முதலில் நாம் உருவாக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றங்களை குறைப்பது மிகவும் நல்லது.

இதனால், குறைப்பதற்கு தேவைப்படுகின்ற அளவில் 50 சதவீதம் வரையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்கலாம்.

"இருக்கின்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். அதன் பின்னர் கார்பன் டை ஆக்ஸைடை பொருட்களில் அடைத்து குறைக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று கிறைஸ்டன்சென் தெரிவித்துள்ளார்.

"இதுவும் முக்கியமானதொரு பங்காற்றலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

காற்று மாசை சமாளிக்க சீனாவின் பிரம்மாண்ட வன நகரம்


BBC Tamil
English summary
Carbon dioxide (CO2) emissions are contributing to global warming, so could technologies removing some of the gas from the atmosphere help slow the process?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற