For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது.

இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும்.

Hands on with Project Spartan, Microsoft’s Internet Explorer replacement

சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார்.

"விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர்வோருக்கான பிரவுசருக்கு என்ன புதிய பெயரை அளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தார். எனவே இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் நுகர்வோருக்கான பிரவுசர் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
r all the things Windows 10 is supposed to do better than Windows 8, one of its most anticipated features is Project Spartan, Microsoft’s soon-to-be replacement for the much maligned Internet Explorer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X