இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு
ஒட்டாவா: கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சம் அடைந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் கனடா வர தடை விதிக்கப்பட்டிருந்தது அந்தத் தடையை செப்டம்பர் 27ம் தேதி (இன்று) நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சம் பெற்றது. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் விமான சேவையை கனடா அரசு தடை செய்தது. இந்தத் தடையை பலமுறை கனடா அரசு நீட்டித்து. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சூழல் தற்போது முற்றிலும் மாறி உள்ளது. தினசரி பாதிப்பு குறைந்து உயிரிழப்பு குறைந்த காரணத்தால், கனடா அரசு இந்திய பயணிகள் விமானம் கனடா வர விதிக்கப்பட்ட தடையை இன்று முதல் விலக்கி உள்ளது.

அனைத்து விதமான வர்த்தக பயணிகள் விமானங்களுக்கும், தனியார் பயணிகள் விமானங்களுக்கும் 26 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்கள் தடையின்றி இயக்கப்படும், இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அதேசமயம் கரோனா தடுப்பூசி, கரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம், பயணிகள் 27ம் தேதி முதல் கனடாவுக்கு வரலாம். பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பயணத்துக்கு 18 மணிநேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விலக்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. ஏர் இந்தியா சார்பில் வரும் 30-ம் தேதி முதல் கனடாவுக்கு விமான சேவை தொடங்குகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications