ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா!
டெல்லி: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. நம் நாட்டின் கப்பல்களுக்கு நட்பு அடிப்படையில் ஈரான் அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் போருக்கு நடுவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இன்று 2 எல்பிஜி கப்பல்கள் நம் நாட்டை நோக்கி வருகை புரிந்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் நம் நாட்டில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் நெருங்கிய நட்பு உள்ளது.
அதோடு நம் நாட்டின் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிப்பு குறித்து மத்திய அரசு ஈரானிடம் எடுத்து கூறியது. அதனை புரிந்து கொண்டு ஈரான் நம் நாட்டுக்கு வரும் கப்பல்களை அனுமதித்து வருகிறது.
ஜலசந்தியை கடக்கும் 2 கப்பல்கள்
அந்த வகையில் தான் இந்தியா வரும் BW Tyr, BW Elm எனும் கேஸ் சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று கடக்க தொடங்கி உள்ளன. துபாய் மற்றும் ராஸ் அல்கைமாவுக்கு வடக்கே மொத்தம் 5 கப்பல்கள் நங்கூரமிட்டு இருந்தன. இதில் இந்த 2 கப்பல்களும் அடங்கும். இந்நிலையில் தான் தற்போது அந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க தொடங்கி இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளதுது.
எவ்வளவு கேஸ் வருது?
இந்த கப்பல்கள் பிஎம் குழுமத்துக்கு சொந்தமானதாகும். இதில் BW Elm கப்பலை HPCL நிறுவனமும், BW Tyr கப்பலை BPCL நிறுவனமும் வாடகைக்கு எடுத்துள்ளன.
இந்த 2 கப்பல்களும் ஏறத்தாழ 93,000 டன் எல்பிஜியை சுமந்து செல்லும் தன்மை கொண்டதாகும். இது நம் நாட்டின் 3 நாள் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
ஏன் முக்கியம்?
இதில் BW Elm கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கியும், BW Tyr கப்பல் மும்பை நோக்கியும் செல்கிறது. இதற்கு முன்பு அரசுக்கு சொந்தமான SCI நிறுவனத்தின் இரண்டு எல்பிஜி கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து கேஸை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளளது.
தற்போதைய சூழலில் நம் நாட்டில் கச்சா எண்ணெய், கேஸ் கப்பல்களின் வருகை என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் நம் நாடு கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 85 சதவீதமும், கேஸ் தேவையில் 60 சதவீதத்தையும் இறக்குமதி தான் செய்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்!














Click it and Unblock the Notifications