ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவு.. மொசூல் நகரை மீட்டது ஈராக் ராணுவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை மீட்டுள்ளது ஈராக் ராணுவம்.

கடந்த 2014ம் ஆண்டு முதல், திடீரென பிரமாண்டம் காட்டிய, ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். அவர்களுக்கு எதிராக ஈராக் ராணுவம் கடுமையாக போராடி வந்தது.

Iraq deafeats ISIS in Mosul

இந்நிலையில் ஈராக்கில் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதையடுத்து தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை மீட்க அந்நாட்டு ராணுவம் முழு முயற்சிகளை எடுத்தது.

உள்நாட்டு போருக்கு பின்பு மொசூல் நகரை மீட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மொசூலுக்கு விரைந்த பிரதமர், ராணுவத்தினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

ஆனால், இன்னும்கூட மொசூல் நகரில் ஆங்காங்கே வெடிகுண்டு சத்தங்கள் கேட்டு வருவதாகவும், விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் அரசின் இந்த வெற்றி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பெறப்பெட்ட பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிகறது. கடந்த 3 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு எதிராக பேராடி வரும் ஈராக் படிப்படியாக, தனது பெரும் பகுதியை மீட்டுள்ளது. ஈராக் ராணுவ வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்காற்றவில்லை என தெரிகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் திட்டப்படியே ஈராக் ராணுவம் வெற்றியை பறித்ததாக இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வந்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Iraq deafeats ISIS in Mosul. Only small pockets remain. All without any plan from Trump. Only using Obama's plan.
Please Wait while comments are loading...