For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அடையாளங்களை மறைக்க... 58 பக்க அறிக்கை வெளியிட்ட அமைப்பு!

Google Oneindia Tamil News

லண்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருபவர்கள் அவர்களின் அடையாளங்களை மறைக்க அந்த தீவிரவாத அமைப்பு 58 பக்க அறிவுரை வழங்கியுள்ளது.

சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை கைபற்றி அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உள்பட சில நாடுகள் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

ISIS released a rule set for Terrorists

தற்போது அந்தத் தீவிரவாதிகள் தங்களது அடையாளம் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்க்க 58 பக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வசம் இருக்கும் செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 15 அறிவுரைகள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிட தக்கது.

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளை ஞர்கள் பெருமளவில் இணைகின்றனர். அவர்களுக்குபயிற்சி அளித்து தாக்கு தல்களுக்கு தீவிர வாதிகள் தயார்படுத்துகின்றனர்.இந்த இயக்கத்தில் சேருபவர்களுக்கு என்று தனி அடையாளங்கள் உள்ளன. அவற்றை வைத்து அவர்கள் அடையாளம் கண்டுபிடிக் கப்படுகின்றனர்.

அதை தடுக்க ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு 58 பக்க அறிவுரை வழங்கியுள்ளது. இது ஆன் லைனின் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அரேபிய மொழி பேசுபவர்கள் மட்டுமின்றி ஏராளமானவர்கள் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் சேர விண்ணப்பிக்கின்றார்கள். உங்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் இருந்து தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

தாடியை எடுத்துவிட்டு மேற்கத்திய பாணி உடைக்கு மாறுங்கள். ஆல்கஹால் கலக்காத கலப்படமற்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள். தாக்குதல் நடத்துவது குறித்து பலத்த சத்தத்துடன் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, யாரும் கேக்காத வண்ணம் இரவு விடுதிகளில் ஆலோசனை நடத்துங்கள். இதனால் உங்களது ரகசிய ஆலோசனை பற்றிய விவரங்கள் வெளியே தெரியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
ISIS released a rule set with 58 pages for not identifying ISIS terrorists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X