For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயுதமேந்தி போராட அழைப்பு விடுக்கும் ஐ.எஸ். இயக்க தலைவன் அல் பக்தாதி - புது ஆடியோ 'ரிலீஸ்'

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ரூட்: அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ். இயக்க தலைவர் அல் பக்தாதி உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்கள் சிரியா, ஈராக்கில் இணைந்து ஆயுதமேந்தி போராடுமாறு அல் பக்தாதி அழைப்பு விடுத்துள்ளான்.

சிரியா, ஈராக்கில் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியிருக்கும் ஐ.எஸ். இயக்கம் தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் தலைவராக அதாவது கலிபாவாக அல் பக்தாதியை பிரகடனம் செய்துள்ளது.

Islamic State issues audio of Baghdadi calling supporters to join him

இந்த ஐ.எஸ். இயக்கமானது ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் பாத் கட்சியினர் மற்றும் அவரது ஆட்சிக் கால ராணுவ அதிகாரிகளைக் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவரான அல் பக்தாதி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வான் வழித் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அல் பக்தாதி உயிரிழக்கவில்லை என்றும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐ.எஸ். இயக்கம் நேற்று அல் பக்தாதியின் ஆடியோ ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் உலகம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்கள் சிரியா, ஈராக்கில் தங்களுடன் இணைந்து ஆயுதமேந்தி போராட வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளான்.

மேலும் தங்களது இஸ்லாமிய தேசத்தில் குடியேற எந்த ஒரு முஸ்லிமுக்கும் மன்னிப்பே கிடையாது.. ஐ.எஸ். இயக்கத்தில் இணைவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்றும் அல் பக்தாதி எச்சரிக்கை விடுத்துள்ளான்.

English summary
Islamic State issued an audio recording on Thursday that it said was by its leader Abu Bakr al-Baghdadi, calling on supporters around the world to join the fight in Syria and Iraq or to take up arms wherever they live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X