For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாய் ஸ்டிக் மூலம்... ‘விண்ணைத் தாண்டி’ சர்வதேச விண்வெளி வீரருக்கு ‘கை’ கொடுத்த விஞ்ஞானி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர் ஜாய் ஸ்டிக் உதவியுடன், நெதர்லாந்தில் இருக்கும் விஞ்ஞானியுடன் கை குலுக்கியுள்ளார்.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே 8,046 கி.மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் அமைத்து, ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று வருகின்றனர்.

ISS astronaut 'shakes' hand with scientist on Earth

தற்போது அங்குள்ள விண்வெளி வீரர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த நாசா வீரர் டெர்ரி விர்ட்ஸ்-ம் ஒருவர்.

இவர் விண்வெளியில் இருந்தபடி பூமியின் மேல்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது புகைப்படங்களாக எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது விண்வெளியில் இருந்த படியே ஜாய் ஸ்டிக் உதவியுடன் நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரே ஸ்சியலுடன் கை குலுக்கியுள்ளார்.

அதாவது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து டெர்ரி கை கொடுத்த சிக்னல் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் விண்கலத்துக்கு சென்றது. பின்னர் அது அங்கிருந்து அமெரிக்காவின் ஹுஸ்டனில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையம் மற்றும் அட்லாண்டிக் கடலை கடந்து நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு சென்றடைந்தது. இந்த சிக்னல் 0.8 வினாடிகளில் விண்வெளியில் இருந்து பூமியை வந்தடைந்தது.

இந்த வித்தியாசமான அனுபவம் குறித்து ஆண்ட்ரே கூறுகையில், ‘டெர்ரி விண்வெளியில் இருந்து கைகுலுக்கியதை உண்மையாக உணர்ந்தேன்' எனத் தெரிவித்துள்ளார். விஞ்ஞானி ஆண்ட்ரே டெலிரோபோடிக்ஸ் நிபுணராக பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A NASA astronaut aboard the International Space Station (ISS) has been able to 'shake hands' with a scientist 8,046 km away on Earth, making history with the first telerobotic 'handshake' between space and Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X