சர்ரென சரிந்தது.. 9.70 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்.. என்ன நடந்தது? அடுத்த பிளான் என்ன?
நியூயார்க்: பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இரண்டாவது காலாண்டில் அதிக அளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்றும் நெட்பிளிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு தொழிற்போட்டிதான் காரணம் என்று நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
எதிர்பாராத அளவில் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 9,70,000 வாடிக்கையாளர்களை நிறுவனம் இழந்துள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ்க்கு சுமார் 221 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இது குறித்து நிறுவனத்தின் இணைத் தலைவரும் நிறுவனருமான ரீட் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், "உண்மையில் நாங்கள் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளோம்" என்றுள்ளார்.

இழப்பு
மேலும், " இது எங்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலாண்டில் இழந்த ஒரு மில்லியன் சந்தாதாரர்களை மீண்டும் கைப்பற்றுவோம் என வருவாய் அறிக்கையிலும் நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் உயர்ந்தன. ஒருபுறம் வாடிக்கையாளர்களை இழந்தாலும் மறுபுறம் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதை இது காட்டுகிறது

நம்பிக்கை
இந்த இழப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் வாடிக்கையாளரின் சந்தாக்களை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வரும் இதுபோன்ற தளத்திற்கு இது பெரும் பின்னடைவு என ஆய்வாளர் ரோஸ் பெனெஸ் கூறியுள்ளார். மேலும் இதே நிலை தொடருமானால் போட்டியாளர்களிடம் நெட்பிளிக்ஸ் தனது இடத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓடிடி
பொதுவாக இந்த ஓடிடி தளத்தில் லாக்-இன் செய்வது மற்றும் சந்தாவை புதுப்பிப்பது உள்ளிட்டவையில் உள்ள சிக்கல்கள் அல்லது நீண்ட நெடிய நடைமுறைகள் இதுபோன்று சந்தாதாரர்களை இழக்க காரணமாக இருக்கலாம் என நிறுவனத்தின் நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல பாஸ்வேர்டுகளை பகிர்ந்துகொள்வதை தடுக்கவும் நெட்பிளிக்ஸ் தொடர்ந்து முயன்று வருகிறது. வாடிக்கையாளர்கள் குறைவுக்கு இது மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சந்தா
இந்நிலையில் சந்தாதாரர்களை அதிகரிக்க கூடுதல் முயற்சியை நெட்பிளிக்ஸ் மேற்கொண்டுள்ளது. அதன்படி மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது குறைந்த கட்டணத்தில் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இவ்வாறான சேவைகளுக்கு இடையில் விளம்பரங்களை கொடுப்பது என திட்டமிப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காகவே மைக்ரோசாஃப்டுடன் நெட்பிளிக்ஸ் கைகோர்க்கிறது. எப்படியாயினும் சந்தாதாரர்களை அதிகரிப்பதில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications