ப்ளூட்டோவுக்கும் அப்பால் ஒரு கிரகம் இருக்காம்... அது பூமியை விடப் பெரிதாம்!
நாசா: ப்ளூட்டோதான் நமது சூரியக் குடும்பத்தில் கடைசி என்பது நாம் ரொம்ப காலமாக கூறி வருவது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது பூமியை விடப் பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அந்தக் கிரகம் தான் சூரியக் குடும்பத்தின் 9வது கிரகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த 9வது கிரகம், ப்ளூட்டோவுக்கு அப்பால் உள்ளதாம். இதற்கான அறிகுறிகளைத் தாங்கள் கண்டுள்ளதாக இரண்டு விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர்.

புதிய கிரகம்...
அவர்களில் ஒருவரான கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் பிரவுன் இதுகுறித்துக் கூறுகையில், ‘இந்தப் புதிய கிரகமானது ப்ளூட்டோவுக்கு அருகே இருக்கலாம். இது பூமியை விடப் பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது ஒரு முழுமையான கிரகமாக இருக்கலாம் என்றும் நம்புகிறோம் என்றார் அவர்.

சந்தேகமேயில்லை...
இன்னொருவரான கான்ஸ்டான்டைன் பாட்கின் கூறுகையில், ‘நிச்சயம் ப்ளூட்டோவுக்கு அப்பால் ஒரு கிரகம் உள்ளது. அதில் சந்தேகமே இல்லை.

சூரியக்குடும்பம் தான்...
அது மிகப் பெரிதாகவும் இருக்கலாம். முழுமையான கிரகமாக அது இருக்கும் என்று நம்புகிறோம். நமது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இது இருக்கலாம்' என்கிறார்.

10 மடங்கு அதிகம்...
இவர்கள் சொல்லும் இந்தப் புதிய கிரகமானது பூமியை விட மிகப் பெரிதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு மினி நெப்ட்யூன் என்று சொல்லப்படும் அளவுக்குப் பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இதன் நிறையானது பூமியை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ப்ளூட்டோ...
ப்ளூட்டோதான் சூரியக் குடும்பத்திலேயே கடைசியில் உள்ளது. வெகு தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் அது உள்ளது.

20,000 வருடங்கள்...
தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு பயங்கர தூரத்தில் அது இருப்பதால் இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 வருடங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.

சுற்றுப்பாதை...
இந்த கிரகமானது சரியான எந்த சுற்றுப் பாதையில் உள்ளது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனராம். இப்படி ஒரு புதிய கிரகம் இருப்பது உண்மையாக இருக்கலாம் என்று பிரெஞ்சு ஆய்வாளர் அலெசான்ட்ரோ மார்பிடெல்லியும் கூறியுள்ளார்.

முக்கிய வேலை...
மார்பிடெல்லி கூறுகையில், ‘நிச்சயம் இது உண்மையாக இருக்கலாம். தற்போது அனைவரின் வேலையும் இந்தக் கிரகதத்தைக் கண்டுபிடிப்பதுதான்' என்கிறார்.

குள்ள கிரகம்...
முன்பு ப்ளூட்டோவும் ஒரு கிரகமாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த 2006ம் ஆண்டு ப்ளூட்டோவை கிரகத்தின் பட்டியலில் இருந்து விஞ்ஞானிகள் நீக்கி விட்டனர். அதை குள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

9வது கிரகம்...
இதனால்தான் தற்போது புதிதாக கூறப்படும் கிரகத்தை 9வது கிரகம் என விஞ்ஞானிகள் கூற ஆரம்பித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications