அனைவருக்கும் பொதுமன்னிப்பு- பெண்களுக்கு உரிமை- நாடுகளுடன் பகைமை இல்லை- தாலிபான்கள் திடீர் அறிவிப்பு
காபூல்: அன்னிய படைகளுடன் தங்களை எதிர்த்து போரிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குகிறோம்; பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும்; உலக நாடுகளுடன் பகைமையை விரும்பவில்லை என திடீரென தாலிபான்கள் அறிவித்து உள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகால யுத்தத்துக்குப் பின்னர் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து தாலிபான்களுடன் ஆப்கான் படைகள் போரிடவில்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதுமே 2 வாரங்களுக்குள் தாலிபான்கள் வசமாகிவிட்டது. தலைநகர் காபூல் இப்போது தாலிபான்கள் பிடியில் உள்ளது. ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளார்.

தப்பி ஓட்டம்
இதனிடையே 1990களில் தாலிபான்களின் ஆட்சி மிக கொடூரமானதாக இருந்தது. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படலாம் என அஞ்சி அந்நாட்டு பொதுமக்கள் சாரை சாரையாக நாட்டை விட்டு தப்பி ஓட காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுக்கின்றனர். விமான நிலையங்களில் ஆப்கானிஸ்தானியர்கள் அனுபவிக்கும் துயரங்கள் உலகை அதிர்ச்சி அடைய வைத்து வருகின்றன.

திடீர் பிரஸ் மீட்
இந்நிலையில் காபூலில் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டி கொடுத்தார். பொதுவாக தாலிபான்கள், ஊடகங்களை எதிர்கொள்வது இல்லை. இதனால் சபியுல்லா முஜாஹித்தின் நேற்றைய பேட்டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சர்வதேச ஊடகங்களுக்கு சபியுல்லா முஜாஹித் அளித்த பேட்டி விவரம்:

அனைவருக்கும் பொதுமன்னிப்பு
தாலிபான்களுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் நாங்கள் மன்னித்துவிட்டோம். பிறருடனான அனைத்து பகைமைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்களுக்கு என எதிரிகள் யாரும் வேண்டாம். நாட்டில் இஸ்லாமிய அரசாங்கம் ஒன்றை சுமூகமான முறையில் அமைக்க இருக்கிறோம். காபூல் நகரத்தின் பாதுகாப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

காபூல் பாதுகாப்பாக இருக்கிறது
வெளிநாட்டு தூதரகங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். வெளிநாட்டு தூதரகங்கள் பாதுகாப்புடன் செயல்படலாம். காபூல் நகருக்குள் நாங்கள் நுழைந்த முதல் நாளில் எங்கள் படைகளை நகருக்கு வெளியே நிறுத்தி இருந்தோம். ஆனால் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் கொள்ளையடித்தல், சூறையாடல்களில் ஈடுபட்டனர். காபூல் நகரில் பொதுமக்கள் இப்போது பாதுகாப்பாகவே உள்ளனர்.

பெண்களுக்கு உரிமை உண்டு
இஸ்லாமிக் எமிரேட் ஆப்கானிஸ்தான் நாடு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. உலக நாடுகளுக்கு எதிரான சக்திகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படவும் தாலிபான்கள் அனுமதிக்கமாட்டார்கள். இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்குட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண்களின் சேவை தேவையானது ஒன்று. தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது.

தேடுதல்கள் இருக்காது
மக்களின் வாழ்வாதாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் நாங்கள் மேம்படுத்துவோம். அனைவருக்குமே நாங்கள் பொதுமன்னிப்பு வழங்குகிறோம். அன்னிய படையினருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் ராணுவத்தினர் உட்பட எவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. வீடுகளுக்கு சென்று தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம். 20 ஆண்டுகால யுத்தத்தில் பொதுமக்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு எதிர்பாராதது. எந்தவித உள்நோக்கத்துடனும் நிகழ்த்தப்பட்டதும் இல்லை. அப்படி ஏதேனும் நிகழ்வுகள் நடந்திருந்தால் அது துரதிருஷ்டவசமானது. காபூல் நகரத்தின் நிலைமை விரைவில் இயல்புக்கு திரும்பும்.

அன்றும் இன்றும் மாற்றம் உண்டு
1990களின் தாலிபான்களுக்கும் இப்போதைய தாலிபான்களுக்கும் தத்துவமும் நம்பிக்கைகளும் ஒன்றுதான். ஏனெனில் அனைவருமே முஸ்லிம்கள்தான். ஆனால் அனுபவரீதியான படிப்பினைகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எங்கள் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்தும். போதைப் பொருட்களை விளைவிக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்காது. போதைப் பொருட்களை விளைவிப்பதற்கு மாற்று நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பி தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம். ஊடகங்கள், தூதரகங்கள் தொடர்ந்து இயங்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தானின் தேச நலன்களுக்கு எதிராக செயல்படவும் கூடாது. நாட்டு மக்கள் யாரும் பாதுகாப்பு இல்லை என அஞ்சி வெளியேற வேண்டியது இல்லை. இவ்வாறு சபியுல்லா முஜாஹித் கூறினார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications