மகளுடன் வந்த வட கொரியா அதிபர் கிம் ஜான் உன்.. ‘சோ ஹியோன்' கப்பலில்.. பெரிய சம்பவம்
சியோல்: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளை தற்போது தீவிரமாக்கி வருகிறது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, 'சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் நேரில் வந்து பார்வையிட்டார்.
வட கொரியாவை பொறுத்தரை சீனா, ரஷ்யாவிற்கு நட்பு நாடாக உள்ளது. அதேநேரம் அமெரிக்காவிற்கு சுத்தமாக பிடிக்காத நாடாகவும் உள்ளது. அவ்வப்போது வடகொரியா தென்கொரியாவை மிரட்டும் வகையில் நடக்கும்.. பதிலுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடததும். இது வழக்கமான ஒன்று தான்.

தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் ராணுவ பயிற்சியை அதிகமாக்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் 'ப்ரீடம் ஷீல்ட்' என்ற ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. எனவே அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக வழக்கம் போல், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, 'சோ ஹியோன்' என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவி உள்ளது, இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது,
'சோ ஹியோன்' கப்பலில் நடந்த ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் நேரில் வந்து பார்வையிட்டார். ஒரு கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, திரையில் ஏவுகணைகள் பாய்வதையும் அவை இலக்குகளைத் தாக்குவதையும் தனது மகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். மகளும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில வாரங்களாகவே தனது மகளை ராணுவ நிகழ்வுகளுக்கு அழைத்து வருவதால், அவரே வடகொரியாவின் அடுத்த வாரிசு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாம். வரும் காலத்தில் வட கொரியாவின் தலைவராக கிம் ஜூ ஏ வருவார் என்றும் உறுதியாக சொல்கிறார்கள்.
இதனிடையே இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு பேசிய கிம் ஜாங் அன், "நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனுடன் இருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்திருக்கிறது" என்றார்.
இதற்கிடையே கிம் ஜாங் அன்-னின் சகோதரி கிம் யோ ஜாங் தனது அறிக்கையில், எதிரிகள் எங்கள் வலிமையை விரைவில் உணர்வார்கள்" என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளதாக எச்சரித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications