For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க பள்ளி ஆசிரியரின் இன வெறி.. ஒபாமா மனைவிக்கே இந்த கதியா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை கொரில்லா என்று இனவெறியைத் தூண்டும் வகையில் ஜார்ஜியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் ஜேன் உட் ஆலன். கடந்த 28 ஆண்டுகளாக ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர் தனது பேஸ்புக் பக்கதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவை கொரில்லா என்று குறிப்பிட்டுள்ளார்.

Racist Facebook posts about Michelle Obama

ஆசிரியர் ஜேன் தனது பேஸ்புக் பதிவில், 'இந்த பாவப்பட்ட கொரில்லா, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி, யதார்த்தமான உலகில் எப்படி வாழப்போகிறதோ...? இனி, அவரது விடுமுறைக்கால உல்லாச சுற்றுலாகளுக்கு அரசுப்பணத்தை செலவிட முடியாது. உல்லாச சுற்றுலாகளுக்கு பதிலாக தனது அழகை பாதுகாப்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்' என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஆசிரியர் ஜேன் உட் ஆலன் இனவெறியுடன் நடந்து கொள்வதாகக் கூறி பள்ளி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இனவாதம் மற்றும் பாரபட்சத்தை ஒருபோதும் தங்கள் பள்ளி ஏற்றுக் கொள்ளாது என்றும் அறிவித்துள்ளது..

English summary
Jane Wood Allen was terminated by the County School for she referred Michelle Obama as a "gorilla."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X