For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 வருட பயணத்திற்குப் பின்னர் புளூட்டோவை நாளை நெருங்கும் "நியூ ஹாரிஸான்ஸ்"

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனித குல வரலாற்றில் முதல் முறையாக, மனிதனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விண்பகுதிக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வரும் பெருமை படைத்த அமெரிக்காவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது, நாளை புளூட்டோ கிரகத்தைக் கடந்து செல்லவுள்ளது.

கிட்டத்தட்ட 9 ஆண்டு காலமாக புளூட்டோவை நோக்கி பயணித்து வந்தது நியூ ஹாரிஸான்ஸ். சமீபத்தில் அது கிரகத்தை நெருங்கியது. இதன் மூலம் பல வியத்தகு புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன.

இந்த நிலையில் தனது ஆய்வின் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது நாளை புளூட்டோ கிரகத்தை 10,000 கி.மீ அளவுக்கு நெருங்கிச் செல்ல உள்ளது. இது மனித இனத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நாளை காலை

நாளை காலை

நாளை காலை 6.50 மணி வாக்கில், நியூஹாரிஸான்ஸ் விண்கலமானது, புளூட்டோவுக்கு 7750 மைல் தொலைவில், சுமார் 10,500 கி.மீ அளவுக்கு, நெருங்கிச் சென்று கடக்கவுள்ளது.

9 வருட பயணம்

9 வருட பயணம்

இந்த விண்கலம் கடந்த 9 வருடமாக பயணித்து சுமார் 3 கோடி மைல் தூரத்தைக் கடந்து புளூட்டோவை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாமானிய சாதனை அல்ல

சாமானிய சாதனை அல்ல

இதுகுறித்து வட மேற்கு புளோரிடா மாகாண கல்லூரியின் இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் டோனி ரூஸோ கூறுகையில், சாதாரண மக்களுக்கு 8000 மைல்கள் என்பது சாதாரணமாக தெரியலாம். ஆனால் இந்தத் தூரத்தை அடைய பல கோடி மைல்களை இந்த விண்கலம் பயணித்திருப்பது மிகப் பெரிய விஷயமாகும் என்றார்.

பெரிய பியானோ சைஸில்

பெரிய பியானோ சைஸில்

ஒரு பெரிய பியானோ சைஸில் உள்ளது இந்த விண்கலம். இதில் பல அறிவியல் உபகரணங்களும், அதி நவீன கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. புளூட்டோ கிரகத்தை 1930ம் ஆண்டு கண்டுபிடித்தவரான கிளைட் டோம்பாக் என்பவரின் அஸ்தியும் இந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 32,00 மைல் வேகத்தில்

மணிக்கு 32,00 மைல் வேகத்தில்

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது புளூட்டோ கிரகத்தை கடக்கும்போது மணிக்கு 32,500 மைல்கள் என்ற வேகத்தில் செல்லும். மேலும் புளூட்டோ கிரகத்தின் தரைப்பரப்பை புகைப்படம் எடுக்கும் விதமாக 7அறிவியல் உபகரணங்களை புளூட்டோவின் தரைப்பரப்பை குறிவைத்து அறிவியல் விவரங்களை மின்னல் வேகத்தில் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பப்படும்.

போகிற போக்கில் டூமில் விடுவது போல

போகிற போக்கில் டூமில் விடுவது போல

இது எப்படி என்றால் போகிற போக்கில் துப்பாக்கியால் சுட்டபடி செல்வது போலாகும் என்று அமெரிக்க, பே கவுன்டி விண்வெளியியல் கழக தலைவர் ரிச்சர்ட் மில்லட் கூறியுள்ளார்.

நாளைய தினம் செவ்வாய் அல்ல!

நாளைய தினம் செவ்வாய் அல்ல!

மொத்தத்தில் நாளைய தினம் செவ்வாயாக இருந்தாலும் அது புளுட்டோவின் தினமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

English summary
For the first time in human history, a man-made object propelled from Earth and still under our control is about to touch the outer edges of our solar system — as the unmanned New Horizons spacecraft flies past Pluto and into the Kuiper Belt. The craft is expected to come closest to Pluto, about 7,750 miles away, at 3 seconds before 6:50 a.m. CDT Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X