அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து ட்ரம்பிடம் வாய்திறப்பாரா மோடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்கா புறப்பட்டுள்ள பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும்போது பிரதமர் மோடி, அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சனை குறித்து வாய்திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். முதலில் போர்ச்சுகல் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பின்னர், 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்த் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று புறப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி செல்கிறார்.

புறப்பட்டார் மோடி

புறப்பட்டார் மோடி

இதைத்தொடர்ந்து இன்று காலையில் அவர் விமானம் மூலம் புறப்பட்டார். நாளை மறுநாள் அதாவது 26ஆம் தேதி மோடி முதல் முறையாக ட்ரம்பை சந்திக்கிறார்.

ட்ரம்ப் உடன் சந்திப்பு

ட்ரம்ப் உடன் சந்திப்பு

அன்று இரவு ட்ரம்ப் உடன் இரவு விருந்தில் பங்கேற்கும் மோடி மீண்டும் மறுநாள் 3.30 மணியளவில் ட்ரம்பை சந்திக்கிறார். அப்போது நாட்டின் பாதுகபாப்பு, தீவிரவாதம், இருநாடுகளின் உறவு மற்றும ஹெச் 1பி விசா பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் உற்றுநோக்கும் சந்திப்பு

உலக நாடுகள் உற்றுநோக்கும் சந்திப்பு

அதிரடி அதிபரான ட்ரம்ப் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் ட்ரம்ப்புக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலா கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருப்பதால் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஹெச் 1பி விசா பிரச்சனை

ஹெச் 1பி விசா பிரச்சனை

ஹெச் 1பி விசா பிரச்சனையை மோடி எழுப்புவார் என தெரிவிக்கிறது. ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக நம்புகிறார் ட்ரம்ப் எனவே இப்பிரச்சனையில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இருநாடுகளின் உறவு

இருநாடுகளின் உறவு

இருநாடுகளின் பாதுகாப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அமெரிக்கா விருப்பம் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

சீனாவின் எழுச்சி

சீனாவின் எழுச்சி

மேலும் சீனாவின் எழுச்சி இருநாட்டு தலைவர்களை கவலையடைய செய்துள்ளது. இதனை இருநாட்டு தலைவர்களும் கவனமாக கையாள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐஎஸ் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு

ஐஎஸ் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு

மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா எதிர்ப்பார்க்கும் என்றும் அதற்கு இந்தியா சம்மதிக்கும என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பங்கேற்க இந்தியா மறுத்திருந்தது. இந்நிலையில் இம்முறை இந்தியா அதனை திரும்பப்பெறும் என தெரிகிறது.

அமெரிக்காவில் தாக்கப்படும் இந்தியர்கள்

அமெரிக்காவில் தாக்கப்படும் இந்தியர்கள்

இதனிடையே அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சனையை பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் எழுப்புவார் என தெரிகிறார். அண்மையில் அமெரிக்காவில் மென்பொறியாளர் ஸ்ரீநிவாசா கொல்லப்பட்து பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்கு பின்னரே ட்ரம்ப் ஆர அமற வாய்திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The big question is whether Modi will raise the issue relating to the attack on Indians in the US. Prime Minister Narendra Modi has left for this three nation visit to Portugal, US and Netherlands. Modi will visit the US which is probably one of the most anticipated.
Please Wait while comments are loading...