இன்றாவது முடிவு கிடைக்குமா, போர் நிறுத்தப்படுமா? - மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான உக்ரைன் ரஷ்யா
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்று மீண்டும் இரு நாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா அணு ஆயுதப்போருக்கு தயாராகிவருகிறது என்ற சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்யா மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் தங்களை ஐரோப்பாவுடன் இணைத்துகொள்ள சொல்லி விண்ணப்பித்திருந்தார். அதன் மீதான ஓட்டெடுப்பை நடத்தியது ஐரோப்பா.

பேச்சுவார்த்தை
இரு தரப்பிலும் போர் தீவிரமாக நடந்துவருகிறது. இரு தரப்பிலும் பொருட் சேதம், உயிர் சேதமும் நடந்திருக்கிறது. உக்ரைன் மீது தீவிரமாக தாக்கியது ரஷ்யா. இதனால் செர்னோபில் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கைப்பற்றியது ரஷ்யா. தலைநகர் கீவ் நோக்கி முன்னேறியது ரஷ்ய படை. இந்நிலையில், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில், ரஷ்யாவும் தயாரானது.

பெலாரஸ்
இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை இரு நாட்டு பிரதிநிதிகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை பல மணி நேரம் நடந்தது. ஆனால் இரு தரப்பிலும் எந்த முடிவுக்கும் யாரும் வரவில்லை. அதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையின் போது, போர் தாக்கத்தை ரஷ்யா குறைத்திருந்தது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன், மீண்டும் போர் தாக்குதலை அதிகரித்தது.

இரண்டாவது பேச்சுவார்த்தை
போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. 2-வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனாலும் ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. ராக்கெட் மூலம் கார்கீவ் நகரை ரஷ்யா தாக்கி வருகிறது. குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டு வீச்சு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், போர் நிறுத்தப்படுமா, இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக முடிவு எட்டப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications