புடினின் Mafia Gang..தடுக்க முடியாது! உக்ரைனுக்கு அடுத்து அந்த நாடுதான்.. கிராண்ட்மாஸ்டர் எச்சரிக்கை
மாஸ்கோ: உக்ரைனை ரஷ்யா வேகமாக பிடித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த போரில் சீனா ரஷ்யாவிற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் ரஷ்யா - சீனா சேர்ந்து இன்னொரு நாட்டை அல்லது இன்னும் சில நாடுகளை பிடிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து 4 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக 25 நாடுகள் குரல் கொடுத்து இருந்தாலும் எந்த நாடும் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பவில்லை.
இந்த போரில் அதிக ஆபத்து அளிக்க கூடிய விஷயம் என்றால் அது ரஷ்யா - சீனா நட்புதான். இந்த போர் தொடங்கிய பின் ரஷ்யாவை சீனா நேரடியாக ஆதரித்து வருகிறது குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான சந்திப்பில் புடின் - ஜி ஜிங்பிங் சந்தித்துக் கொண்டனர்.

கிராண்ட்மாஸ்டர்
இரண்டு நாடுகளும் நோ லிமிட் உறவை பேணி வருகின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட ரஷ்யாவிற்கு சீனா நேரடி ஆதரவு அளித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை சீனா ஆதரிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் எதிர்காலத்தில் ரஷ்யா - சீனா சேர்ந்து இன்னொரு நாட்டை அல்லது இன்னும் சில நாடுகளை பிடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் கேரி காஸ்ப்ரோவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கேரி காஸ்ப்ரோவ்
அவர் India Today ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உக்ரைன் போரை புடின் நேரடியாக திட்டமிட்டார். அவர் மறைமுகமாக இந்த பிளானை போடவில்லை. ஆனால் இதை மேற்கு உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மட்டும் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த போர் வந்திருக்காது. புடின் வெளிப்படையாக போருக்கு பிளான் போட்டுகொண்டு இருந்தார். 2007ல் நடந்த கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

பேட்டி
வரலாற்றில் இருந்தது போல பெரிய நாடுகள் சிறிய நாடுகளை கட்டுப்படுத்தும் நிலை மீண்டும் வர வேண்டும் என்று அவர் கூறினார். அவர் பசிபிக் கடலில் இருந்த ரஷ்ய கடல் படையை பிளாக் கடலுக்கு கொண்டு வர இதுதான் காரணம். உக்ரைன் போருக்கு அவர் முன்பில் இருந்தே தயாராகிக் கொண்டு இருந்தார். உக்ரைனை அவர் அனைத்து பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைத்து இருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் செய்தது போல புடின் செய்கிறார். ஆனால் இவரை ஐரோப்பிய நாடுகள் கவனிக்க தவறிவிட்டன. ஜெர்மனி, யு.கே, பிரான்ஸ் மற்றும் மற்ற நாடுகள் பல புடினின் வியாபார திட்டங்களுடன் தொடர்பு கொண்டு இருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டன. ரஷ்யா இப்போது நேரம் பார்த்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிட்லர்
புடினின் குணங்களில் ஒன்று பொய் சொல்வது. அவர் மிக சிறப்பாக பொய் சொல்வார். அவருக்கு எது தேவையோ, எது சாதகமாக இருக்குமோ அதை செய்வார். மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டார். ஐரோப்பா இதை சரியாக கண்டிக்கவில்லை. அவர்களின் தவறுதான் இந்த போர் நடக்கவே காரணம். புடினை வளரவிட்டது அவர்கள் தவறு. அவர் தற்போது அழிக்க முடியாதவர் போல ஆகிவிட்டார்.

கிரிமியா 2014
அதனால் உக்ரைனை தாக்க தொடங்கிவிட்டார். 2014 கிரிமியாவை அவர்கள் கைப்பற்றிய போதே இது தொடங்கிவிட்டது. இப்போது புடின் வென்றால் அடுத்த தைவான்தான். ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டு சீனா தைவானை பிடிக்கும். அப்போதும் உலக நாடுகள் இப்படித்தான் இருக்கும். ரஷ்யாவுடன் சீனா இப்போது துணையாக உள்ளது. அதேபோல் சீனாவுடன் ரஷ்யா தைவான் விவகாரத்தில் துணை இருக்கும்.

போர்
ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் செய்ததை போல இப்போது புடின் செய்கிறார். இது நன்மை பயக்காது. புடின் ஒரு கேங்கை வைத்து இருக்கிறார். அவரிடம் இருப்பது ஒரு மாபியா.அந்த மாபியா ரஷ்யாவை கட்டுப்படுத்தி வருகிறது. அந்த மாபியா சொல்வதுதான் சட்டம். அவர்களின் கோரிக்கைகளை புடின் நிறைவேற்றி வருகிறார். எங்கள் நாட்டின் மீது அவர்கள் கரையை ஏற்படுத்திவிட்டனர்.

தைவான்
நேட்டோவில் உக்ரைன் சேர்வதற்கும் இதற்கும் தொடர்பே இல்லை. ரஷ்யாவை சுற்றி பல நாடுகள் நேட்டோவில் உள்ளன. ஆனால் ரஷ்யாவிற்கு அதனால் பாதுகாப்பு பிரச்சனை இல்லை. இது நேட்டோவை பற்றியது அல்ல. இது புடினின் மாபியாவின் விருப்பம். நாட்டை பெரிதாக்க வேண்டும் என்ற புடினின் விருப்பம். அவ்வளவுதான். இது தைவானிலும் நடக்கும் என்று ரஷ்யாவை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் கேரி காஸ்ப்ரோவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications