Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்பா.. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிற்கு ஒரே மாதத்தில் இவ்வளவு செலவா? அதிர்ச்சி தகவல்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவை சமாளிக்க ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 ஆயிரத்து 995 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. ரஷ்யா தரப்பில் உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தன. உக்ரைன் மீதான போருக்கான முன்னோட்டம் என அந்த மேற்கத்திய நாடுகள் கூறின.

பிப்ரவரி 24ல் போர்

பிப்ரவரி 24ல் போர்

இந்த கூற்றை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. படைகள் பயிற்சிக்காக மட்டுமே குவிக்கப்பட்டுள்ளன. போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் திடீரென்று பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவில் அந்நாட்டு படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தன.

தாக்குதல்

தாக்குதல்

இதை உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போர் என கூற, ரஷ்யா மட்டும் ராணுவ நடவடிக்கை என கூறியது. மேலும், உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. இதை சரிசெய்யவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. போர் துவங்கிய பிப்ரவரி 24 முதல் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்த துவங்கியது. குண்டுகள் வீசப்பட்டன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

பலிகள் அதிகரிப்பு

பலிகள் அதிகரிப்பு

இதனால் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பாவி மக்கள், உக்ரைன் ராணுவத்தினர் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதேபோல் உக்ரைன் நடத்திய தாக்குதலிலும் ரஷ்யா வீரர்கள் வீரர்கள், படை தளபதிகள் இறந்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இருதரப்பிலும் பலிகள் அதிகரித்து வருகின்றன.

செலவு எவ்வளவு

செலவு எவ்வளவு

இந்நிலையில் உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரஷ்யாவை எதிர்கொள்ள செலவழிக்கப்பட்ட தொகை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஷ்யாவுடனான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகி உள்ளது. இது உக்ரைன் நாட்டின் சொந்த வரி வருவாய் மற்றும் சர்வதேச நாடுகளின் உதவி ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.75 ஆயிரத்து 995 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+