டிரம்ப்கிட்ட வேலை செய்ய முடியாதுப்பா சாமி! ராஜினாமா செய்த பனாமா நாட்டின் அமெரிக்க தூதர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பணியாற்ற முடியவே முடியாது என்று கூறி பனாமாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை ஜான் பீலே ராஜினாமா செய்துவிட்டார்.

மத்திய அமெரிக்கா - தென் அமெரிக்கா இடையே உள்ள பனாமா நாட்டின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர், ஜான் ஃபீலே. இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

US Ambassador to Panama resigns his post because of Trump

அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரின் பைலட்டுக்கா பணியாற்றிய ஜான் ஃபீலே, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கீழே பணியாற்ற முடியாது என்பதால் கௌரவம் காரணமாக பனாமா நாட்டுக்கான தனது தூதர் பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது ராஜிணாமா கடிதத்தில் அவர் கூறுகையில் அயல்நாட்டு சேவை பிரிவின் இளநிலை அதிகாரியான நான், ஒருசார்பின்றியும், சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அமெரிக்க அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்துக்கு நேர்மையாக பணியாற்றுவேன் என்னும் உறுதிமொழி மேற்கொண்டு இந்த பணியில் சேர்ந்தேன்.

அந்த உறுதிமொழியின்மீது என்னால் செயலாற்ற இயலவில்லை என்பதால் கவுரவம் கருதி ராஜினாமா செய்வது நல்லது என்று முடிவு செய்தேன். அதற்கான காலம் கனிந்தது என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின்மீது அதிருப்தி கொண்டு பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது அமெரிக்க தூதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, சோமாலியா நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நைரோபி நாட்டு விவகாரங்களை கவனித்துவந்த எலிசபெத் ஷேக்கல்ஃபோர்ட் என்ற பெண் அதிகாரி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US Ambassador to Panama John Feeley, a career diplomat has resigned, saying he no longer felt able to serve President Donald Trump.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X