மோடிதான் முக்கியம்.. ரஷ்யாகிட்ட பேச சொல்லுங்க! இந்தியாவை "பெரிதும்" நம்பும் உக்ரைன்! என்ன காரணம்?
மாஸ்கோ: ரஷ்யா தங்கள் நாடு மீது நடத்தும் போரை முடிவிற்கு கொண்டு வர இந்தியா உதவியாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்து வருகிறது. உக்ரைனின் இந்த கோரிக்கைக்கு பின் பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
இன்று காலை.. உக்ரைன் தொலைக்காட்சிகள் முன் கனத்த முகத்தோடு தோன்றிய உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குளேபா மிகவும் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில்..ரஷ்யா எங்கள் மீது போர் தொடுக்கிறது.
இதை முறியடிக்க உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும். ரஷ்யாவிடம் நட்பாக இருக்கும் நாடுகள் போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவிடம் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ரஷ்யாவிடம் கோரிக்கை
இந்தியா, சீனா, நைஜீரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் பேச வேண்டும். இந்த போரை முடிவிற்கு கொண்டு வர அழுத்தம் கொடுக்க வேண்டும். போரை நிறுத்துவது என்பது எங்களுக்கு மட்டுமில்லை. மொத்த உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும். இந்தியா உக்ரைனின் நட்பு நாடாக இருந்துள்ளது. அவர்களின் மாணவர்கள் பலர் எங்கள் நாடுகளில் படிக்கிறார்கள்.

உக்ரைன் மாணவர்கள்
உக்ரைனின் விவசாய பொருட்களை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. இப்படியே போர் தொடர்ந்தால் எங்களால் விவசாயம் செய்ய முடியாது. இந்தியாவிற்கு விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டாவது ரஷ்யாவை போரை நிறுத்தும்படி இந்தியா கோரிக்கை வைக்க வேண்டும்.

இந்திய குடிமகன்கள்
இந்திய பிரதமர் மட்டுமின்றி குடிமக்களும் கூட ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் குரல்களை பதிவு செய்ய வேண்டும். ரஷ்யாவிற்கு எதிராக பொது மேடைகளில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு அரசு பல முறை இந்தியாவின் உதவியை நம்பி இருக்கிறது. தொடக்கத்திலேயே இந்தியாவிற்கான உக்ரைன் தூதர்... இந்தியாவை ரஷ்யாவிடம் பேச சொல்ல வேண்டும். பிரதமர் மோடி சர்வதேச தலைவர். அவர் நினைத்தால் போர் முடிவிற்கு வரும் என்று கூறினார்.

மீண்டும் கோரிக்கை
அதன்பின் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் போனில் பேசிய போதும் இதே கோரிக்கையை வைத்தார். இப்போது மீண்டும் உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இதே கோரிக்கையை வைத்து இருக்கிறார். இப்படி உக்ரைன் அரசு பிரதமர் மோடியை ரஷ்யாவிடம் பேச சொல்லவும், இந்தியாவை பெரிதும் நம்பி இருக்கவும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

காரணங்கள்
காரணம் 1- இந்தியா எப்போதும் அணி சேரா நாடாகவே இருந்துள்ளது. ஐரோப்ப நாடுகள், நேட்டோ நாடுகள் போல இந்தியா ரஷ்யாவிற்கு எதிரி இல்லை. இப்போது இருக்கும் பெரிய நாடுகளில், அனைத்து விவகாரங்களிலும் நடுநிலை வகிக்கும் ஒரே நாடு இந்தியாதான். இதனால் இந்தியா மட்டுமே இந்த விவகாரத்தில் சமரசம் பேசுவது சரியாக இருக்கும்.
காரணம் 2- மேற்கு உலகிற்கும் - ரஷ்யாவிற்கு இடையே பாலமாக இருக்கும் ஒரே நாடு இந்தியாதான். இந்தியா அமெரிக்காவுடனும் நட்பாக உள்ளது. ரஷ்யாவுடனுன் பாரம்பரிய நட்பை கடைபிடித்து வருகிறது என்பதால் இந்தியா இதில் தூதுவராக இருக்க முடியும்.

வேறு காரணங்கள் என்னென்ன?
காரணம் 4 - அதோடு பாரம்பரியமாக ரஷ்யா - இந்தியா இடையே உறவு உள்ளது. அதே சமயம் இந்தியா உக்ரைனையும் நேரடியாக எதிர்க்கவில்லை. இப்படி இருக்கும் போது இந்தியா நேரடியாக அமைதியை கொண்டு வரவில்லை என்றாலும் இரண்டு நாட்டிற்கான சமாதான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதனால் இந்தியாவை உக்ரைன் பெரிதும் நம்பி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications