For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடங்கொக்கமக்கா... கோழிக்கு பதில் அதன் ‘கக்கா’வைச் சாப்பிடக் கொடுத்த கேஎப்சி!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் கோழிக்கறிக்குப் பதில் அதன் கழிவை சாப்பிடக் கொடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது கேஎப்சி நிறுவனம்.

இங்கிலாந்தின் வெலிங்போரப் பகுதியில் கேஎப்சி துரித உணவகம் இயங்கி வருகிறது. கடந்த 13ம் தேதி இங்கு கசந்தா ஹரிஸ் என்ற 22 வயது பெண் மருந்தாளர் சாப்பிடச் சென்றுள்ளார்.

Yet Again, KFC Serves Something 'Disgusting'

அவர் 6 பவுண்ட்ஸ் செலுத்தி கோழி இறைச்சி மற்றும் பர்கருக்கு ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது.

அதை சாப்பிடலாம் என எடுத்தவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். காரணம் அந்த கோழிக்கறி பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. அதன் உள்ளே, கோழியில் மூளை மற்றும் இரைப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் இருந்துள்ளன.

அதோடு அவர் ஆர்டர் செய்த பர்கரின் முடியும் இருந்துள்ளது. இதனால் அந்த உணவுகளை சாப்பிடாமல் அவர் அப்படியே வைத்து விட்டார்.

தகவலறிந்த கேஎப்சி நிறுவன அதிகாரிகள், அப்பெண்ணிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினர். சில சமயங்களில் உணவு சமைக்கும் போது இது போன்ற தவறுகள் நடந்து விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கு, அதிக கவனம் எடுத்துக்கொள்ளுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்றும் கேஎப்சி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘கோழிக்கழிவுகளை பார்த்தவுடன் அதனை தொடுவதற்கு கூட எனக்கு பிடிக்கவில்லை, இனிமேல், நான் கேப்சி துரித உணவகத்தில் சாப்பிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்தாண்டு அமெரிக்காவில், சிக்கன் விங்க்ஸ்க்கு பதில் எலியை பிரை பண்ணிக் கொடுத்து சர்ச்சையில் சிக்கியது கேஎப்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Cassandra Harris from UK, ordered for a Zinger tower meal for 6 pounds and an extra piece of chicken from the fast food restaurant, KFC. What awaited her inside the fried crust was not white chicken meat but raw giblets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X