அரசு அதிகாரிபோல் போலி கையெழுத்து - கரூர் அருகே அதிமுக நகர செயலாளரை கைது செய்த காவல்துறை
கரூர்: போலியாக ஆவணம் தயாரித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்த புகாரின்பேரில் புஞ்சை புகலூர் பேரூராட்சி அதிமுக நகர செயலாளரை காவல்துறை கைது செய்தது.
Recommended Video
நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அங்கு கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குதல், சொத்து வரி நிர்ணயம் செய்தல், ஆய்வு செய்தல், மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.

அதிமுக நகர செயலாளர் மிரட்டல்
இந்த நிலையில், புகலூர் அதிமுக நகர செயலாளராக உள்ள விவேகானந்தன் என்பவர் சுப்பு கார்டன் என்ற பெயரில் மனைகளுக்கு தடையில்லா சான்று கோரி கருப்பையாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் பெறப்படாத அந்த மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் நங்கவரம் பேரூராட்சிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

போலி கையெழுத்திட்டு மோசடி
இந்த நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு போலியாக கையெழுத்து போட்டு சுப்பு கார்டன் மனைகளுக்கு விவேகானந்தன் தடையில்லா சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

கருப்பையா அளித்த புகார்
இந்த நிலையில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு புகார் கடிதம் எழுதிய கருப்பையா, இந்த மோசடியான பத்திரப்பதிவு காரணமாக பேரூராட்சிக்கு ரூபாய் 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தடையில்லா சான்று வழங்கப்படாத சுப்பு கார்டன் இடம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.

கருப்பையாவிடம் போலீஸ் விசாரணை
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கருப்பையாவிடம் விசாரணை நடத்தினர். அதில், விவேகானந்தன் போலியாக கையெழுத்திட்டு தடையில்லா சான்று பெற்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது விவேகானந்தன் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக நகர செயலாளர்
இந்நிலையில் நேற்றிரவு கரூரில் இருந்த அவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications