Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் மாணவி-திருச்சி ஆசிரியர் தற்கொலை...! வாட்ஸ்ஆப்பால் விபரீதம்! நடந்தது என்ன?

கரூர் மாணவி தற்கொலையுடன் முடிச்சுப்போடப்பட்ட திருச்சி ஆசிரியர் தற்கொலை விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய மாணவர்கள் வாட்ஸ் ஆப் தகவல்களை போலீஸார் சேகரிக்க முடிவெடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கரூர் மாணவி விவகாரம் வெடித்த நிலையில் மாணவி படித்த பள்ளி ஆசிரியரின் திடீர் தற்கொலை இணைத்து முடிச்சுப்போட்டு ஆசிரியர் தற்கொலையை தூண்டிய மாணவர்களின் வாட்ஸ் ஆப் மெசேஜ்களை பரிசோதிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

    Karur School Girl வழக்கில் திடீர் திருப்பம் | Oneindia Tamil

    கரூர் மாணவி தற்கொலை

    கரூர் மாணவி தற்கொலை

    கோவை மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தபட்ட பள்ளி ஆசிரியர், பள்ளி பெண் முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பள்ளி குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பேச பள்ளிகளில் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்தப்பிரச்சினை அடங்குவதற்குள் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

    பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும்-கரூர் பள்ளி மாணவி தற்கொலை

    பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும்-கரூர் பள்ளி மாணவி தற்கொலை

    கரூரை சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி கடந்த 19-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் டைரியில் தற்கொலைக்கான காரணத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வதற்கு மிகவும் ஆசை, ஆனால் என்னால் முடியவில்லை.

    பெரியாளாகி நிறைய பேருக்கு உதவி செய்யவும் ஆசை. ஆனால் உங்கள் எல்லாரையும் விட்டு நான் போகிறேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் நான் இந்த உலகை விட்டு போகிறேன். எனக்கு தொல்லை கொடுத்தவனை பற்றி கூறுவதற்கு கூட பயமாக இருக்கிறது", என எழுதி ஆங்கிலத்தில் சாரி மச்சான் என தனியாக குறிப்பிட்டிருந்தார். என அவர் கைப்பட எழுதி வைத்திருந்தார்.

    வேதியியல் ஆசிரியர் மீது குற்றம் சாட்டிய தாய், கணித ஆசிரியர் தற்கொலை

    வேதியியல் ஆசிரியர் மீது குற்றம் சாட்டிய தாய், கணித ஆசிரியர் தற்கொலை

    பள்ளியில் உள்ள வேதியியல் ஆசிரியர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தனது மகள் அந்த பாட புத்தகத்தில் சில சந்தேக குறியீடுகளை வரைந்துள்ளதாகவும், அந்த பாடப்பிரிவின் வகுப்பை கவனிக்கவே தனது மகளுக்கு பிடிக்காது என்றும், பள்ளியில்தான் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என தாயார் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பள்ளியில் அந்த மாணவியின் தாய், உறவினர்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதே தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் தனது தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

    முடிச்சுப்போட்ட சமூக வலைதளங்கள் போலீஸ் வீசாரணை

    முடிச்சுப்போட்ட சமூக வலைதளங்கள் போலீஸ் வீசாரணை

    கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் நடந்த சில நாட்களிலேயே அதே பள்ளியின் ஆசிரியர் தற்கொலை செய்துக்கொண்டதால் முடிச்சுபோடப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸார் விசாரித்தபோது ஆசிரியர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தான் சம்பந்தமில்லாமல் இந்த விவகாரத்தில் இழுத்துவிடப்பட்டதாகவும், தன்னை மாணவர்கள் இணைத்து பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தியது என்றும் காரணங்களை அடுக்கியிருந்தார்.

    ஆசிரியர் தற்கொலை வாட்ஸ் அப் தகவல்களை சேகரிக்கும் போலீஸார்

    ஆசிரியர் தற்கொலை வாட்ஸ் அப் தகவல்களை சேகரிக்கும் போலீஸார்

    ஆசிரியர் தற்கொலை விவகாரத்தில் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் மாணவர்கள் மற்றும் அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்களை போலீஸார் சேகரித்து விசாரணையில் இறங்க உள்ளனர். போலீஸ் விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரூர் மாணவி தற்கொலை குடும்பப்பிரச்சினையும் காரணமாக இருக்கலாம் போலீஸ் தரப்பு

    கரூர் மாணவி தற்கொலை குடும்பப்பிரச்சினையும் காரணமாக இருக்கலாம் போலீஸ் தரப்பு

    கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் அவர் குறிப்பிட்ட பாலியல் தொல்லை முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தை மறுக்காத போலீஸார் அதே நேரம் மாணவியின் தந்தை மரணம் மாணவியை வெகுவாக பாதித்ததும், உறவினர் ஒருவரின் மரணம் பாதித்ததையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின் நீக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதையும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மாணவி கடித விவகாரம் அடிப்படையிலும் விசாரணை நகர்கிறது என்கின்றனர்.

    திருச்சி ஆசிரியர் தற்கொலை மன உளைச்சலே

    திருச்சி ஆசிரியர் தற்கொலை மன உளைச்சலே

    இதனிடையே ஆசிரியர் தற்கொலை அவர் அவமானத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவசரப்பட்டு எடுத்த முடிவு என்று திருச்சி போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே வழக்கம் போல் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது, தேவையற்ற ஊகங்களையும் உண்மை என நம்புதல் கூடாது இது சில நேரம் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கும், அல்லது யதார்த்த நிலையை விட்டு போலீஸ் விசாரணையை தள்ளி வைத்துவிடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+