காதுக்கு வந்த தகவல்.. என்ன நடந்தாலும் விடக்கூடாது.. செந்தில் பாலாஜி போட்ட சபதம்.. என்னாச்சு?
கரூர்: கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கட்சி மேலிடத்தின் குட் புக்கில் இருந்தாலும் தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவுவதால் மீண்டும் சிவகாம சுந்தரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் கிருஷ்ணராயபுரம் தொகுதியின் பல்ஸ் அறிந்தவர்கள். அதனால் கலக்கத்தில் இருக்கிறாராம் சிவகாம சுந்தரி.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் வெல்வோம் என செந்தில் பாலாஜி சபதம் எடுத்துள்ளார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அனேகமாக செந்தில் பாலாஜி இந்த முறையும் கரூரில் போட்டியிடுவார் என்றே தெரிகிறது.

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் எம்.ஆர் விஜயபாஸ்கரை விட சுமார் 12ஆயிரம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார் செந்தில் பாலாஜி. அதனால் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் செந்தில் பாலாஜி. மீதமுள்ள மூன்று தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி டிக் அடிக்கும் நபர் தான் வேட்பாளர். ஆனால் தனித்தொகுதியான கிருஷ்ணராயபுரம் தொகுதிதான் இப்போதைக்கு இழுபறியில் இருக்கிறதாம். அதாவது சிட்டிங் எம்எல்வுக்கு மறுபடியும் சீட் கிடைக்குமா அல்லது கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க பரிந்துரைக்கலாமா என டைலமோவில் இருக்கிறராம் செந்தில் பாலாஜி.
கிருஷ்ணராயபுரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ சிவகாம சுந்தரி பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். கட்சியினரிடமும் எந்த எதிர்ப்புகளும் இல்லை. ஆனால், பொதுக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவதாக செந்தில் பாலாஜியின் காதுகளுக்கு செய்திகள் போயிருக்கின்றனவாம். அதனால் மறுபடியும் சிவகாம சுந்தரிக்கு வாய்ப்பு கொடுத்து, ஒருவேளை முடிவு எதிர்மறைாயாகிப் போனால் சொந்த மாவட்டத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது போலாகி விடும் என்பதால் கூட்டணி கட்சிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியை பரிந்துரைக்கலாமா என யோசனையில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அந்த முடிவில் செந்தில் பாலாஜி உறுதியாக இருந்துவிட்டால் ஜாக்பாட் அடிக்கப்போவது என்னவோ நாகை திருவள்ளுவளுக்குத்தான் என்கிறார்கள் சிலர்.
இந்த தொகுதியை குறிவைத்து தான் நாகை திருவள்ளுவன் கடந்த சில மாதங்களாக காய் நகர்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் தான், தமிழ் புலிகள் கட்சியின் செல்வாக்கை பல்ஸ் பார்க்கும் விதமாகவும் செந்தில் பாலாஜியின் ஆசீர்வாதம் தனக்கு இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி கோடங்கிப்பட்டியில் தமிழ் புலிகளின் மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் நாகை திருவள்ளுவன். அதிலும், திமுகவின் முப்பெரும் விழாவை செந்தில் பாலாஜி நடத்திய அதே மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக( செந்தில் பாலாஜியின் சகல உதவிகளுடன்) வெல்லும் தமிழ்நாடு என்ற பெயரில் மாநாடு நடத்தி முடித்துள்ளார் திருவள்ளுவன். இந்த மாநாட்டில், செந்தில் பாலாஜி கலந்து கொண்டதோடு, திமுகவின் கூட்டணி கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு 2026 சட்டமன்ற தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது. மாநாட்டிற்கு பிறகு தான் நாகை திருவள்ளுவனை ஆப்சனில் கொண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்நலையில் தான், தனித்தொகுதியான கிருஷ்ணராயபுரத்தில் நாகை திருவள்ளுவனை பரிந்துரைக்கும் யோசனையில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அப்படி வாய்ப்பு கிடைத்தால் தனது வெற்றியை செந்தில் பாலாஜி உறுதி செய்து விடுவார் என்பதால் ஏக குஷியில் இருக்கிறாராம் திருவள்ளுவன்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications