மக்கள் செத்துட்டாங்க.. பதில் சொல்லுங்க விஜய்.. செய்தியாளர்கள் கேட்க கேட்க.. நிற்காமல் விரைந்த விஜய்!
கரூர்: திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணங்களுக்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை. அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.
செந்தில் பாலாஜி விளக்கம்
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் எந்தக் கட்டணமும் வாங்காதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் மருத்துவர்களை உடனடியாக வரச் சொல்லி இருக்கிறோம், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் வேகமாக வீட்டிற்கு திரும்புகிறார்
ஆனால் விஜய் கரூரில் மக்களை சந்திக்கவோ.. இரங்கல் தெரிவிக்கவோ.. தொண்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்யவோ நினைக்கவில்லை. இந்த மரணத்திற்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை.
ஆனால் அவசர அவசரமாக அவர் சென்னை விரைகிறார். இதற்காக அவர் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து உள்ளார். திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்களை சந்திக்காத விஜய்
அங்கே செய்தியாளர்கள் விஜயிடம்.. சார்.. மக்கள் பலியாகிஇருக்கிறார்கள் விஜய்.. பலர் செத்துட்டாங்க.. செய்தியாளர்களை பாருங்க.. எங்களிடம் பதில் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால் விஜய் அவர்களை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார். மக்கள் செத்துட்டாங்க விஜய்.. பதில் சொல்லாமல் போனால் என்ன நியாயம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் விஜய் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
எடப்பாடி இரங்கல்
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும், அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உதவிகளை வழங்க பணித்துள்ளேன் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications