தென்பெண்ணை நதிக்கு குறுக்கே அணை கட்டிய கர்நாடகா.. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை நதிக்கு குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு துணைபோவதாக கூறி கண்டித்து, கிருஷ்ணகிரியில் அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும்,பாசன நீராகவும் விளங்கக்கூடிய தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதி விளங்குகிறது.

இந்த நதியின் குறுக்கே கர்நாடக அரசு சட்டத்திற்குப் புறம்பாக மார்கண்டேய நதியில் படுக்கை அணை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சொல்லிவிட்டு,உயர்மட்ட தடுப்பணையை சட்டவிரோதமாக கட்டி உள்ளது. இதனால் தென்பெண்ணை பாசன பகுதி தமிழ்நாட்டில் பாலைவனமாக மாறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள், கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் உரையாற்றினார். தருமபுரி மண்டல தலைவர் சின்னசாமி,மலைவாழ் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஏர்காடு ராமர், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாநகர தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications