Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர், ரஜினியின் தீவிர ரசிகர்! மலேசியா பிரதமரான அன்வர் இப்ராஹிம்.. தமிழர்கள் இஷ்டம்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

கேலாலம்பூர்: மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்த அன்வர் இப்ராஹிம் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இவர் எம்ஜிஆர், ரஜினியின் தீவிர ரசிகர் என்பதும், தமிழர்களுடன் நெருக்கமாக இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேசியாவில் சில ஆண்டுகளாக கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு நிலையான ஆட்சி என்பது கேள்விக்குறியானது.

இந்த குழப்பமான அரசியல் சூழலால் கடந்த 2018 முதல் 3 பிரதமர்களை மலேசியா பார்த்தது. இந்நிலையில் தான் நிலையான ஆட்சியை தேர்வு செய்யும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மலேசியா நாடாளுமன்ற தேர்தல்

மலேசியா நாடாளுமன்ற தேர்தல்

தொங்கு நாடாளுமன்றம் இதையடுத்து மலேசியாவில் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும், கூட்டணிக்கு பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. இதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது. இந்த தேர்தலில் நீண்டகாலம் மலேசியாவை ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலாய் தேசிய கூட்டணி வெறும் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்த அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பிஎச் எனும் கூட்டணிக்கு அதிகபட்சமாக 83 இடங்கள் கிடைத்தது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பிஎன் எனும் கூட்டணிக்கு 73 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் நீண்டகாலம் மலேசியாவை ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலாய் தேசிய கூட்டணி வெறும் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்த அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பிஎச் எனும் கூட்டணிக்கு அதிகபட்சமாக 83 இடங்கள் கிடைத்தது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பிஎன் எனும் கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது.

பிரதமராகும் அன்வர் இப்ராஹிம்

பிரதமராகும் அன்வர் இப்ராஹிம்

இதனால் புதிய அரசை அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் தான் மலேசியாவில் கூட்டணி ஆட்சியை அமைக்க மலேசியா மன்னர் முடிவு செய்தார். அதன்படி மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை மலேசியா மன்னர் அல் சுல்தான் அப்துல்லா அறிவிப்பு செய்தார். அதன்படி மலேசியாவில் அதிக இடங்களை பெற்ற பெரும்பான்மை கட்சிகளின் ஒற்றுமை ஆட்சி நடப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதமராக பதவியேற்பு

பிரதமராக பதவியேற்பு

அதன்படி இன்று மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார். மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிமின் வயது 75 ஆகும். இவர் மலேசியாவின் 10 வது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக மலேசியாவில் பிரதமர் பதவியை பிடிக்க போராடி வந்த நிலையில் இறுதியாக தற்போது சாதித்துள்ளார்.

 யார் இவர்?

யார் இவர்?

அன்வர் இப்ராஹிம் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் மாணவ பருவத்தில் அரசியலில் நுழைந்தார். இவர் 1971ல் மலேசியாவில் ABIM எனும் முஸ்லிம் இளைஞர் இயக்கத்தை உருவாக்கினார். கிராமங்களில் நிலவும் வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். 1957ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து மலேசியாவை ஆட்சி செய்து வந்த BN எனும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் (UMNO) இவர் சேர்ந்து நிதியமைச்சரானார். ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் 1998ல் அப்போதைய பிரதமராக இருந்த மகாதீரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கட்டார். பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த நிலையில் அன்வர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்டது 8 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்தார்.

நீண்ட கால எதிர்க்கட்சி தலைவர்

நீண்ட கால எதிர்க்கட்சி தலைவர்

அதன்பிறகு 2008 முதல் 2015 வரையும், 2018 முதல் 2022 வரையும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தார். மலேசியாவில் நீண்டகால எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரை பெற்றார். இந்நிலையில் தான் தற்போது அவர் தொங்கு நாடாளுமன்ற காரணமாக மன்னர் அல் சுல்தான் அப்துல்லாவின் தலையீட்டின் மூலம் பெரும்பான்மை கட்சிகளின் ஒற்றுமை ஆட்சியில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

 தமிழர்களுடன் நெருக்கம்

தமிழர்களுடன் நெருக்கம்

தற்போது பிரதமராகி உள்ள அன்வர் இப்ராஹிம் மலேசியாவில் வாழும் இந்தியர்களுடன் நெருக்கமானவர். தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவருடன் மிகவும் நெருக்கம் கொண்டுள்ளார். குறிப்பாக தமிழர்களுக்கு அவரது மனதில் தனிஇடம் உள்ளது. தற்போது அவரது கூட்டணியில் எம்பிக்களாக உள்ள தமிழர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

எம்ஜிஆர்-ரஜினியின் ரசிகர்

எம்ஜிஆர்-ரஜினியின் ரசிகர்

மேலும் அன்வர் இப்ராஹிம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான எம்ஜிஆர் மற்றும் தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். இவருக்கு ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படமும், மலேசியாவில் படமாக்கப்பட்ட கபாலி படமும் பிடிக்குமாம். குறிப்பாக சிவாஜி த பாஸ் எனும் டையலாக் அவரது பேவரைட்டாகும் என கூறியுள்ளார்.மேலும் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் எம்ஜிஆரின் பாடல்களை படித்து நடனமும் ஆடியுள்ளார். குறிப்பாக ‛‛நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த பூமியில் ஏழைகள் அழமாட்டார்'' எனும் பாடல் அவரது பேவரைட்டாகும். அந்த வகையில் தான் தற்போது மலேசியாவில் பிரதமராகி பாமர மக்களுக்காக சேவையாற்ற தயாராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+