32 ஆண்டுக்கு முன்பே வடிவமைப்பு.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் சவப்பெட்டியின் ரகசியம்.. முழுவிபரம்
லண்டன்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி 32 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் உள்ள சில நாடுகளில் மட்டுமே இன்னும் மன்னர், மகாராணி பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் முதன்மையானதாக ஐரோப்பிய கண்டம் உள்ளது. இங்கு தொன்றுதொட்டு அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் பிரிட்டனின் மகாராணியாக 2ம் எலிசபெத் இருந்து வந்தார். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறிய நிலையில் 70 ஆண்டு காலமாக பிரிட்டன் மகாராணியாக செயல்பட்டு வந்தார்.

வயது முதிர்வால் மரணம்
இவர் இங்கிலாந்ததை வழிநடத்தியதற்கு அப்பாற்பட்டு எப்போதும் தான் அணியும் உடைக்கும் ஏற்ப மேட்சாக தொப்பி, கைப்பை, கண்ணாடி பயன்படுத்தி 2K கிட்ஸ் வரையும் பிரபலமானவர் தான் இந்த 2ம் எலிசபெத். 96 வயது நிரம்பிய நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அரசு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அவர் சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸை மட்டும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு கடந்த 8ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார்.

நாளை இறுதிச்சடங்கு
மறைந்த மகாராணி 2ம் எலிசபெத்துக்கு செப்டம்பர் 19ம் தேதி (நாளை) இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் உலக தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, மகாராணி 2ம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

32 ஆண்டுக்கு முன்பே வடிவமைப்பு
இந்நிலையில் தான் 2ம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள Coffin எனும் சவப்பெட்டி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 32 ஆண்டுகளுக்கு முன்பே மகாராணி 2ம் எலிசபெத்துக்கான சவப்பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‛இங்கிலிஷ் ஓக்' எனும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தற்போதைய சூழலில் அதிகம் இல்லை. இதனால் அபூர்வமான மரமாக இது பார்க்கப்படுகிறது.

பிரத்யேக வடிவமைப்பு
பிரிட்டனில் அரச குடும்பத்துக்கான இறுதி சடங்குகளுக்கான சேவையை 1991ல் இருந்து லெவர்டன் அன்ட் சன்ஸ் எனும் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போதும் ‛இங்கிலிஷ் ஓக்' எனும் மரத்தின் பலகைககள மூலம் செய்யப்பட்ட சவப்பெட்டியை வழங்கி உள்ளது. இருப்பினும் சவப்பெட்டியை தயாரித்தவர்களின் பெயர், விபரங்கள வெளியாகவில்லை. இந்த சவப்பெட்டியின் மேல்பகுதியில் ராணியின் கிரீடம், செங்கோலை நிலை நிறுத்தும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈயத்தகடுகள் பயன்பாடு
மேலும் சவப்பெட்டியை பிடிக்கும் வகையிலான பித்தளை கைப்பிடிகள் தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை பர்மிங்காமில் உள்ள நிறுவனம் செய்துள்ளது. அரசு குடும்பம் என்பதால் உடலுக்கு அதிகமானவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். இதனால் நீண்டநாட்கள் உடல் பெட்டியில் வைக்க வேண்டும். இதற்காக இங்கிலிஷ் ஓக் மரத்தாலான பெட்டியின் உள்ளே ஈயம் எனும் உலோகத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காற்று புகாத பெட்டியாக மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் ஈரப்பதமும் உள்ளே செல்ல முடியாது. இந்த சிறப்பு வடிவமைப்பால் சவப்பெட்டியின் எடை கொஞ்சம் அதிகமாக இருக்கும். பெட்டியை 8 பேர் சேர்ந்து தான் துக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications