Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பப்பா.. இத்தனையா? பிரிட்டன் அரசக் குடும்பத்தினர் பின்பற்றும் "மலைக்க வைக்கும்" விதிமுறைகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்தின் மரணத்தால் அந்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

96 வயதான எலிசபெத் மகாராணி மரணத்தை அடுத்து, ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் திட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருக்கிறது.

அந்நாட்டில் அரசக் குடும்பத்தில் (ராயல் ஃபேமிலி) மன்னராகவும், ராணியாகவும் பதவியேற்கும் நபர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான நடைமுறைகள் குறிப்பிட்ட பெயரிலான திட்டத்தின் கீழ் தான் நடைபெறும். அதன்படி, தற்போது ராணி எலிசபெத் மரணத்துக்கு பிறகான நிகழ்வுகளை மேற்கொள்ள, ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற விதிமுறைகள் பிரிட்டன் அரசக் குடும்பத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. அரசக் குடும்பத்தில் பிறப்பு முதல் மரணம் வரை இதுபோன்ற ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. அரசக் குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல மருமகனாக அல்லது மருமகளாக ராயல் ஃபேமியில் இணைபவர்கள் கூட இந்த விதிமுறைகளை மிக கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரிட்டன் ராயல் ஃபேமிலி உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வித்தியாசமான விதிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

 விதி 1 என்ன?

விதி 1 என்ன?

1. இரண்டு குழந்தைகள் கட்டாயம்

பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருக்கும் தம்பதிகள் கட்டாயம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு குழந்தைகளை பெற்றுக் கொள்வது அவர்களின் விருப்பம். ஆனால், இரண்டு குழந்தைகள் பெறுவது கட்டாயம். தற்போது மரணம் அடைந்த 2-ம் எலிசபெத் மகாராணி - பிலிப் தம்பதியினர் முதன்முறையாக 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அடுத்ததாக, அவர்களின் மகனான இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டான் மட்டுமே 3 குழந்தைகளை பெற்றுக் கொண்ட அரசக் குடும்பத் தம்பதி ஆவர்.

விதி 2 பாலினம்

விதி 2 பாலினம்

2. பாலினம் ரகசியம்

அரசக் குடும்பத்தில் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை யாரும் வெளியிடக் கூடாது. அரசக் குடும்பம் என்பதால் குழந்தை பிறக்கும் முன்கூட்டியே அது ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் கூறிவிடுவார்கள். ஆனால், குழந்தை பிறக்கும் வரை அதன் பாலினம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்ததும் மருத்துவர் அதன் பாலினத்தை எழுதிக் கொடுப்பார். அது பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றதும், அங்கிருக்கும் ஊழியர்கள் குழந்தையின் பாலினத்தை அலங்கரிக்கப்பட்ட கரும்பலகையில் எழுதி அதை அரண்மனை கேட்டில் மாட்டி விடுவார்கள். அதனை பார்த்து அரசக் குடும்பத்தில் என்ன குழந்தை பிறந்திருக்கிறது என மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

 முக்கிய விதிகள்

முக்கிய விதிகள்

3. கிரீடம்

அரசக் குடும்பத்தில் திருமணமான பெண்கள் மட்டும் தங்கள் தலையில் சிறிய கிரீடத்தை அணிந்திருப்பார்கள். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் தான் அவர்கள் கிரீடம் அணிய வேண்டும். பகல் நேரங்களில் தொப்பி மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.

4. கைப்பையே சமிக்ஞை

ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் மகாராணி எலிசபெத் கலந்துகொள்ளும் போது, அவரது பாதுகாவலர்களுடன் அவர் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அவர் கைப்பையை எப்படி வைத்துக் கொள்கிறார் என்பதே பாதுகாவலர்களுக்கான சமிக்ஞை ஆகும். உதாரணமாக, இரவு விருந்தில் ராணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் தனது கைப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டால் 5 நிமிடத்திற்குள் விருந்து நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என அர்த்தம். அதற்கான பணிகளை பாதுகாவலர்கள் செய்து விடுவார்கள். அதேபோல, விருந்தில் இருந்து ராணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் அங்கிருக்கும் அரசக் குடும்பத்தினரும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காதலிலும் விதிகள்

காதலிலும் விதிகள்

5. ப்ரப்போஸ் செய்வதிலும் கூட

அரசக் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரையாவது காதலித்தால், அந்த நபரிடம் தங்கள் காதலை தெரிவிக்கும் முன் ராணியிடம் அனுமதி பெற வேண்டும். ராணி நோ சொல்லிவிட்டால் எல்லாம் கதம் கதம் தான்.

6. ராணி பிறந்தநாள் முக்கியம்

பிரிட்டன் ராயல் ஃபேமியில் சில நிகழ்வுகள் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். அதில் முக்கியமானது ராணியின் பிறந்தநாள். அரண்மனையில் நடைபெறும் ராணியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புதிதாக திருமணம் ஆனவர்கள், ஏன் அன்றைக்கு குழந்தையே பெற்றிருந்தாலும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றே ஆக வேண்டும்.

 நடத்தை விதிகள்

நடத்தை விதிகள்

7. உட்காரவும் விதிமுறை

பிரிட்டன் அரசக் குடும்பத்தில் உள்ள பெண்கள் (ராணி உட்பட) கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது. அது பொது இடமாக இருந்தாலும் சரி. வீட்டிலும் சரி. கால் மேல் கால் போடக் கூடாது. அதேபோல, உட்காரும் போது இரண்டு முட்டிகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கி வைத்துதான் அமர வேண்டும். மேலும், பாதங்கள் ஒன்றன் மீது ஒன்று இருக்க வேண்டும்.

8. பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் போது அரசக் குடும்பத்தில் இருப்பவர்கள் கறுப்பு நிறத்தில்தான் உடை அணிந்திருக்க வேண்டும்.

9. பிரிட்டனை பொறுத்தவரை தாயக்கட்டை (மோனாபோலி) விளையாட்டு மிகவும் பிரபலம். ஆனால் அரசக் குடும்பத்தினர் மறந்தும் தாயக்கட்டைகள் விளையாடக் கூடாது.

உணவு விதிகள்

உணவு விதிகள்

10. அரசக் குடும்பத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டியது கட்டாயம் என பார்த்தோம். அதேபோல, ஒரு இடத்திற்கு அரசக் குடும்பத் தம்பதி பயணிக்கும் போது 2 பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இருவரையும் ஒன்றாக அழைத்துச் செல்லக் கூடாது.

11. பூண்டா.. நோ நோ

பிரிட்டன் அரசக் குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை உட்பட எந்த அரண்மனைகளிலும் ஒரு பூண்டை கூட பார்க்க முடியாது. சமையலுக்கு பூண்டுகள் பயன்படுத்தப்படாது. ஏன் தெரியுமா? சிம்பிள். மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பூண்டு பிடிக்காது.

 உடை தொடர்பான விதிகள்

உடை தொடர்பான விதிகள்

12. கவர்ச்சி உடைகள் கூடவே கூடாது

அரசக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சிறிது கூட தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணியக் கூடாது. அதனால் பெண்கள் தங்கள் கழுத்து வைர உடை அணிந்திருப்பார்கள். இதற்கு விதிவிலக்காக டயானா மட்டும் கழுத்துக்கு சற்று கீழே மேல் உடை அணிந்திருப்பார். ஆனால், குனியும் சமயங்களில் அவரது கைப்பையை வைத்து மார்பகத்தை மறைத்துக் கொள்வார்.

13. குழந்தைகளுக்கு 'டிரெஸ் கோட்'

அரசக் குடும்பத்தில் பெண்களுக்கு மட்டும் ஆண்கள்.. ஏன் ஆண் குழந்தைகளுக்கு கூட எப்படி உடை அணிய வேண்டும் என்ற விதிமுறை உண்டு. ஆண் குழந்தைகள் அரண்மனையில் பிரத்யேகமா தைக்கப்பட்ட டவுசர்களையே அணிய வேண்டும். 10 வயதுக்கு மேல்தான் பேண்ட் அணிய முடியும்.

 அரசியல் தொடர்பான விதிகள்

அரசியல் தொடர்பான விதிகள்

14. ராணியிடம் எளிதில் பேச முடியாது

வீட்டில் நம் அம்மாவிடம் பேசுவது போல எல்லாம் நினைத்த நேரத்தில் அரசக் குடும்பத்தினர் ராணியிடம் பேசிவிட முடியாது. அதற்கான உரிய அனுமதியை பெற்றே பேச வேண்டும். இரவு விருந்தில் யாரும் ராணியிடம் பேசக்கூடாது. ராணி பேச விரும்பினால் மட்டுமே அவர் பேச்சை தொடங்குவார்.

15. அரசியல் பேசக்கூடாது

அரசக் குடும்பத்தில் இருப்பவர்கள் பொது இடங்களில் பிரிட்டன் அரசியல் குறித்து பேசவே கூடாது. அதேபோல, தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும் அவர்கள் தெரிவிக்கக் கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+