லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ராயல் வால்ட்" 200 ஆண்டுகள் பழையது! கீழே மொத்தம் 25 உடல்கள்! அப்போ ராணியின் உடல் புதைக்கப்படவில்லையா

Google Oneindia Tamil News

லண்டன்: ராணியின் உடல் முதலில் வைக்கப்பட்ட ராயல் வால்ட்டில் அரசு குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 25 பேரின் உடல்கள் இருக்கிறது. அப்படியென்றால் ராணியின் உடல் புதைக்கப்படவில்லையா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.

பிரிட்டன் மகாராணி ராணி எலிசபெத் கடந்த செப். 8இல் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்காட்லாந்து அரண்மனையில் ஓய்வெடுத்து வந்த ராணி எலிசபெத், அங்கேயே உயிரிழந்தார்.

 செங்கோல், கிரீடம், 1947இல் எடுக்கப்பட்ட மலர்.. ராணி எலிசபெத் சவபெட்டியில் நிரம்பி இருந்த சுவாரஸ்யம் செங்கோல், கிரீடம், 1947இல் எடுக்கப்பட்ட மலர்.. ராணி எலிசபெத் சவபெட்டியில் நிரம்பி இருந்த சுவாரஸ்யம்

 ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

அவரது மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய மன்னராக எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் பொறுப்பிற்கு வந்தார். ராணி எலிசபெத்தின் மறைவு பிரிட்டன் நாட்டில் 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது

 இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கின் போது அரசு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அங்கு வந்து இருந்தனர். இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு மதச் சடங்குகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், அங்கு அவரது உடல் முதலில் புதைக்கப்படவில்லை.

 ராயல் வால்ட்

ராயல் வால்ட்

திங்கள்கிழமை இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நேரலையில் டிவியில் பார்த்தவர்களுக்கு இது தெரிந்து இருக்கும். அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், ராணியின் உடல் கீழே ராயல் வால்ட்டிற்கு ( royal vault) இறக்கப்பட்டது. அப்படி கீழே இறக்கப்படுவது கூட டிவில் காட்டக் கூடாது என்று விதி இருப்பதால் அதுவும் ஒளிபரப்பப்படவில்லை. அப்போது ராணியின் உடல் புதைக்கப்படவில்லையா? ராயல் வால்ட் என்றால் என்ன? எனப் பல கேள்விகள் எழலாம். அதற்கான பதில்களைப் பார்க்கலாம்.

 ராயல் வால்ட் என்றால் என்ன

ராயல் வால்ட் என்றால் என்ன

ராயல் வால்ட் என்பது வின்ட்சர் கோட்டையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கீழே சுமார் 16 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஒரு அறை. இதில் தான் அரசு குடும்பத்தைச் சேர்ந்த சிலரின் உடல்கள் வைக்கப்படும். 1810ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட அந்த அறையில் அதிகபட்சம் 44 உடல்களை வைத்துக் கொள்ள முடியும். கடந்த 200 ஆண்டுகளில் உயிரிழந்த அரசு குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரின் உடல்கள் அங்கு உள்ளது. இந்த ராயல் வால்ட்டிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

 டயானா

டயானா

மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் மகள், இளவரசி அமெலியா உடல் இங்கு முதன்முதலில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பலரது உடல்கள் அங்கு வைக்கப்பட்டது. அதேநேரம் இளவரசி டயானாவுக்கு அரசு முறையில் இறுதிச்சடங்கு நடந்த போதிலும், அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அப்போதைய இளவரசர் சார்லஸிடம் இருந்து விவகாரத்து பெற்றுவிட்டதாலும் டயனாவின் உடல் இங்கு வைக்கப்படவில்லை.

 இளவரசர் பிலிப்

இளவரசர் பிலிப்

கடந்த ஆண்டு உயிரிழந்த இளவரசர் பிலிப்பின் உடலும் இந்த ராயல் வால்டில் தான் கடந்த ஓராண்டாக வைக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ராணி எலிசபெத்தின் உடலும் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதேநேரம் இருவரின் உடலும் மற்ற அரசு குடும்பத்தினரின் உடல் போல அங்கேயே இருக்காது. ராணியின் உடல் செயின்ட் ஜார்ஜுக்குள் அமைந்துள்ள கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் புதைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அருகிலேயே அவரது கணவர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

 எங்கே

எங்கே

கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் தான் ராணியின் தந்தை மற்றும் தாய் ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இது ஏன் தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை என்று கேள்வி எழலாம். ஏனென்றால் ராணியின் உடலை நல்லடக்கம் செய்யும் இந்த நிகழ்வில் அரசு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை. தொலைக்காட்சிக்கும் அனுமதி இல்லை. இதன் காரணமாகவே ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டது.

English summary
Queen Elizabeth II's coffin was placed in Royal Vault at Windsor Castle: Queen Elizabeth II funneral Royal family members will be lowered to Royal Vault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X