75 ஆயிரம் பேருக்கு வேலை நியமன ஆணை வழங்கிய மோடி.. கொரோனாவால் பொருளாதாரத்தில் தாக்கம் என பேச்சு
லக்னோ: நாட்டில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்தொற்றின் காரணமாக (covid) ஏற்பட்ட விளைவுகளை 100 நாட்களில் தீர்த்து விட முடியாது என்று பேசினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொத்துறை நிறுவனங்களில் அடுத்த 18 மாதங்களுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் முதல் கட்டமாக இன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

வாரணாசியில் இருந்தபடி பிரதமர் மோடி
பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே துறை, தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில்பாதுகாப்பு படை, சிபிஐ, சுங்கத்துறை, வங்கி என மத்திய அரசின் பல துறைகளில் இளைஞர்களுக்கான பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரோஜ்கர் மேளா என்ற பெயரில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசியில் இருந்தபடி இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னையில் நிர்மலா சீதாராமன்
சென்னை ஐ.சி.எப்.பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவில் இருந்தும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா குஜராத்தில் இருந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சண்டிகரில் இருந்தும், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் பங்கேற்றனர்.

100 நாட்களில் தீர்த்துவிட முடியாது
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- 75 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. பல மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட திணறி வருகின்றன. பல நாடுகளில் பண வீக்கம் மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பிரச்சினை உச்சத்தில் உள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பெருந்தொற்றின் காரணமாக (covid) ஏற்பட்ட விளைவுகளை 100 நாட்களில் தீர்த்து விட முடியாது.

மக்களின் ஆசிர்வாதத்தால்..
உலகம் முழுவதும் இந்த பிரச்சினையும் அதன் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்தியா புதிய முயற்சிகளையும் சில துணிச்சலான முடிவுகளையும் எடுத்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் இந்தியாவை அதிகம் பாதிக்காத வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணிதான். ஆனால், உங்களுடைய ஆசிர்வாதத்தால் இதுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

ஜே பி நட்டா பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியதாவது:- 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடிக்கு உள்ளது. இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா இன்று பாதுகாப்பு தளவடாங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியிருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 40 சதவிகிதமாக உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் மூலம் நமக்கு கிடைத்த விளைவுகள் தான் இவை. இவ்வாறு அவர் பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications