வீடு வீடாக வாள், கோடரி விநியோகத்தை இந்துத்துவா அமைப்பினர்.. ஷாக் காரணம்.. 6 பேர் அதிரடி கைது
லக்னோ: வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் இங்கு நடக்ககூடாது என்று கூறி ஹிந்து ரக்சா தளம் என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் வீடுவீடாக வாள், கோடரியை வழங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு வெடித்த வன்முறையில் 2 இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு நம் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கண்டுக்கொள்ளாமல் உள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள வங்கதேசத்தின் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தி் ஷாலிமார் கார்டன் காலனி உள்ளது. இங்கு ஹிந்து ரக்சா தளம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வாள், கோடரி உள்ளிட்டவற்றை இந்து மக்களுக்கு வழங்கினர்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டும் அவர்கள் வீடு வீடாக சென்று இந்த செயலில் ஈடுபட்டனர். இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் பூபேந்திரா வீடியோ வெளியிட்டுள்ளார். இஸ்லாமியர்களாக பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்க 250 வீடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதத்தை வைத்து இஸ்லாமியர்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இந்து மக்களுக்கு ஹிந்து ரக்சா தளம் எப்போதும் துணை நிற்கும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் கொடூரமானது. அங்கு இந்துக்கள் கொல்லப்பட்டுகின்றனர். வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை போல் இங்கு வந்து விடக்கூடாது. இதனால் வீடு வீடாக ஆயுதங்கள் வழங்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஹிந்து ரக்சா தளம் அமைப்பை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, வாள், கோடரி உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தஅமைப்பின் தலைவர் பூபேந்திரா தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி, போலீஸ் துணை ஆணையர் நிமிஷ் படேல் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 191(2) (கலவரத்தில் ஈடுபட்ட குற்றம்), 191(3) (கொடிய ஆயுதத்துடனோ அல்லது தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்துதல்), 127(2) (சட்டவிரோதமாக சிறை வைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications