லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“அற்புதம்”.. 2024 ராமநவமி! அயோத்தி ராமர் கோயில் சிலை தலையில் சூரிய கதிர்கள் விழும்! சிபிஐஆர் தகவல்

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ராம நவமியின்போது சூரிய கதிர்கள் விழும் என மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் முகலாய பேரரசர் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி நிலத்தை ராம ஜென்ம பூமி என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் உரிமை கோரி வந்தனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இந்துத்துவா அமைப்பினரால் தகர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி நில வழக்கின் விசாரணை நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.

அந்த 3 பேர் சொல்வதுதான்! “யாருக்கும் கிடைக்காம”.. ஓபிஎஸ் பிளானை போட்டு உடைத்த அணி மாறிய நிர்வாகிகள்!அந்த 3 பேர் சொல்வதுதான்! “யாருக்கும் கிடைக்காம”.. ஓபிஎஸ் பிளானை போட்டு உடைத்த அணி மாறிய நிர்வாகிகள்!

பரபரப்பு தீர்ப்பு

பரபரப்பு தீர்ப்பு

நாடே எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு வழங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்து இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ராமர் கோயில்

ராமர் கோயில்

மேலும் பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வழங்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2024ல் திறக்க திட்டம்

2024ல் திறக்க திட்டம்

வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் கோயில் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி ராமர் கோயிலுக்கு பூமிப்பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சீல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த ராமர் கோயிலின் தோற்ற புகைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

50% பணிகள்

50% பணிகள்

ரூ.1,800 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இந்த ராமர் கோயில் பணிகல் 50 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். வரும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என அவர் கூறி உள்ளார்.

சூரிய கதிர்கள்

சூரிய கதிர்கள்

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு ராம நவமி அன்று அதில் இருக்கும் ராமர் சிலையின் தலையில் சூரிய கதிர்கள் விழும் என மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனமான CBIR தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக CBIR ஆராய்ச்சியாளர்கள் காணொளி வாயிலாக விளக்கம் அளித்து வருகிறார்கள்.

English summary
Central Building Research Institute has informed that the sun rays will fall on the head of the Ram idol in the Ram temple being built on the site of the demolished Babri Masjid in Ayodhya during Rama Navami in 2024.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X