5 மாதத்தில் அசுர வளர்ச்சி! சர்ரென உயர்ந்த அகிலேஷ் கிராப்.. யோகிக்கு சிக்கல் -ஏபிபி சி வோட்டர் சர்வே
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே வருவதாக ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் ஆதரவு குறைவதாகவும், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு அதிகரிப்பதாகவும் இந்த சர்வே தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடிக்கொண்டே வருகிறது. உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும்.
பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற நான்கு முனை போட்டி நிலவினாலும் சமாஜ்வாதி, பாஜக இடையே முக்கிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிப்பு
உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக ஏபிபி சி வோட்டர் நேற்று கருத்து கணிப்பு வெளியிட்டது. கடந்த 5 மாதமாக ஏபிபி சி வோட்டர் இணைந்து இந்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி மாத கணிப்புப்படி பாஜகவுக்கு 223-235 இடங்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 145-147 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

6 மாத கணிப்பு
இந்த சதவிகிதம் 35 ஐ தொட்டால் பாஜகவின் தோல்விக்கு கூட சமாஜ்வாதி கட்சி காரணமாக அமைந்துவிடும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, சமாஜ்வாதி பெற வாய்ப்பு உள்ள இடங்கள் தொடர்பாக கடந்த 5 மாதத்தில் ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கணிப்புகள் பின்வருமாறு,

2021 செப்டம்பர் மாத கணிப்பு
பாஜக கூட்டணி - 259 - 267 இடங்கள்
சமாஜ்வாதி கூட்டணி - 109- 117 இடங்கள்
அக்டோபர் மாத கணிப்பு
பாஜக கூட்டணி - 241- 249 இடங்கள்
சமாஜ்வாதி கூட்டணி - 130- 138 இடங்கள்
நவம்பர் மாத கணிப்பு
பாஜக கூட்டணி - 213- 221 இடங்கள்
சமாஜ்வாதி கூட்டணி - 152 - 160 இடங்கள்
டிசம்பர் மாத கணிப்பு
பாஜக கூட்டணி - 212- 224 இடங்கள்
சமாஜ்வாதி கூட்டணி - 151 - 163 இடங்கள்
ஜனவரி மாத கணிப்பு
பாஜக கூட்டணி - 223- 235 இடங்கள்
சமாஜ்வாதி கூட்டணி - 145- 157 இடங்கள்

என்ன சொல்கிறது கணிப்பு?
இந்த கணிப்புப்படி பார்த்தால் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் கிராப் வேகமாக உயர்ந்து வருகிறது. செப்டம்பரில் 109 இடங்களில் இருந்து ஜனவரியில் கிட்டத்தட்ட 160 இடங்கள் வரை அகிலேஷ் யாதவிற்கு 5 மாதங்களில் உயர்ந்துள்ளது. 5 மாதத்தில் கூடுதலாக 50 இடங்களை பெறப்போவதாக கணிப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அகிலேஷ் யாதவிற்கு உத்தர பிரதேசத்தில் மக்களின் ஆதரவு பிரச்சாரம் செய்ய செய்ய அதிகரிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக சரிவு
அதேபோல் பாஜகவின் இடங்கள் கடந்த 5 மாதத்தில் சரிந்துள்ளது. 267 இடங்களில் இருந்து 235 இடங்களாக குறைந்துள்ளது. 5 மாத இடைவெளியில் பாஜக 32 இடங்களை இழந்துள்ளது. இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸுக்க இந்த தேர்தலில் வெறும் 7 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறது இந்த கணிப்பு. எனவே பாஜகவின் இடங்கள் எல்லாம் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதிக்கு செல்வது கணிப்பு மூலம் உறுதியாகிறது.

உருவெடுக்கிறாரா?
இதனால் தேர்தல் நெருங்க நெருங்க அகிலேஷ் யாதவ் அங்கு பெரிய தலைவராக உருவெடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்போது 33 சதவிகித வாக்கு மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது. பாஜகவிற்கு 41.5% வாக்கு உள்ளதாக கணிப்பு தெரிவிக்கிறது. வாக்கு சதவிகிதம் 35 ஐ தொட்டால் பாஜகவின் தோல்விக்கு கூட சமாஜ்வாதி வழி வகுக்கும். ஆனால் இன்னும் 2 சதவிகித வாக்குகளை சமாஜ்வாதி பெறுவது கடினம் என்ற ஏபிபி சிவோட்டர் கணிப்பு தெரிவிக்கிறது. இதனால் வரும் மாதங்களில் தேர்தல் களம் பெரிய அளவில் மாற்றங்களை காணும் வாய்ப்புகள் உள்ளன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications