மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமியை அழைத்து வர ஆர்.பி.உதயகுமார் ஆர்வம்!
மதுரை: மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க வைக்க ஆர்வம் காட்டுகிறார் ஆர்.பி.உதயகுமார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிய பிறகு எடப்பாடி பழனிசாமி பங்கேற்க போகும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அதனை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.
இதனிடையே மதுரை, திருச்சி, விழுப்புரம் என மூன்று ஊர்களை எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து வருவதாகவும் அதில் எந்த ஊரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க முடிவு செய்கிறார் என்ற விவரம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

அண்ணா பிறந்தநாள்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல் அந்த பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

மதுரையில் பொதுக்கூட்டம்
தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவாளர்களை திரட்டி மாஸ் காட்ட ஆயத்தமாகிவிட்டார் ஓபிஎஸ். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எந்த ஊரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்து அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஆர்வம் காட்டுகிறார்.

எந்த ஊரில்?
அந்தப் பொதுக்கூட்டத்துக்கு பெருமளவில் ஆட்களை திரட்டுவதன் மூலம் தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்குக்கு பஞ்சமில்லை என்ற பிம்பத்தை உருவாக்க அவரது தரப்பு ஆலோசித்து வருகிறதாம். இதனிடையே மதுரை, திருச்சி, விழுப்புரம் என மூன்று ஊர்களை எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து வருவதாகவும் அதில் எந்த ஊரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க முடிவு செய்யப் போகிறார் எனவும் தெரியவில்லை எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
Recommended Video

பலத்தை உணர்த்த
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மூலம் தங்களது பலத்தை டெல்லிக்கு காட்ட ஆயத்தமாகி விட்டார்கள் என்பது மட்டும் புரிகிறது. இதற்கு மத்தியில் சசிகலாவும் தனது பங்குக்கு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை தஞ்சையில் நடத்த ஆலோசித்து வருகிறாராம்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications