ஒரே தட்டில் ஓபிஎஸ் ஈபிஎஸ்? பாஜகவின் நோக்கம் இதுவா? தடாலடியாக மறுத்த எடப்பாடி டீம்! செல்லாத நோட்டு!
மதுரை : மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் சமமாக ட்ரீட் செய்யப்பட்டதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனத் தெரிகிறது. அதனை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தும், தனியாகச் சந்திக்க நேரம் ஒதுக்காமல் வரவேற்பதற்கு மட்டும் தலா 5 பேரை அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியை வரவேற்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அருகருகே நின்ற புகைப்படம் வெளியானதால், ஓபிஎஸ்ஸின் இணைப்பு முயற்சிக்கு சாதகமாகவே பாஜக தலைமை சிக்னல் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தகவலால் எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆகியுள்ளார். ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சமமாக நடத்தப்படவில்லை என்றும், எடப்பாடியையே பிரதமர் மதித்தார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பழையபடி இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரு அணிகளிலும்
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து நேற்று முன் தினம் தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் எம்.பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சமமாக நடத்தப்பட்டனர்
பிரதமர் மோடியை வரவேற்க பாஜக நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 42 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை அருகருகே அழைத்து பூங்கொத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது. அதேபோல, வழியனுப்பும்போதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அருகருகே நின்றிருந்தனர். இதனால், பிரதமர் மோடியின் விருப்பம், இருவரும் இணைந்து இருக்க வேண்டும் என்பது தான் என்றும், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பாஜக தலைமை உடன்படவில்லை என்றும் தகவல்கள் பரவின.

ஈபிஎஸ் அப்செட்
எடப்பாடி பழனிசாமியின் முடிவை பாஜக தலைமை நிராகரித்துவிட்டது, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலுவாக எடுத்துச் சொல்லிவிட்டது, எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸை சேர்க்கும் முடிவுக்கு வருவார் என்றெல்லாம் கூட தகவல்கள் பரவின. ஓபிஎஸ் அருகே ஈபிஎஸ் சிரித்தபடி பிரதமருடன் நிற்கும் புகைப்படம் அரசியல் அரங்கையே அமளிதுமளி ஆக்கியது. ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி சற்றும் ரசிக்கவில்லை. தன்னையும் ஓபிஎஸ்ஸையும் பாஜக ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதை விரும்பவில்லை எனத் தெரிகிறது.

ராஜன் செல்லப்பா
இதையடுத்து, ஈபிஎஸ் ஆதரவாளர் ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ்ஸை இணைக்க வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளார். அ.தி.மு.கவை பொறுத்தவரை ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் மீண்டும் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் மீண்டும் அவரை இணைப்பது சாத்தியம் இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைய எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. அ.தி.மு.கவின் 2,532 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

செல்லாத நோட்டு
மேலும், அதிமுகவை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தை செல்லாத 1000 ரூபாய் நோட்டாகத்தான் பார்க்கிறோம். அவருடன் யாரும் எந்த தொடர்பிலும் இல்லை. பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. கூட்டணி கட்சி என்பதால் அவரை மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியுடன் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியிடம் மட்டும் தான்
இதேபோல, ஆர்பி உதயகுமாரும், ஈபிஎஸ், ஓபிஎஸ் சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். எடப்பாடியாரை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது. எடப்பாடியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரிடமும் பிரதமர் பேசவில்லை. விமான நிலையத்தில் பிரதமர் பேசிய ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான்.

பேசிக்கொள்ளவில்லை
நான் அருகில் இருந்தபடியே முழுமையாக கவனித்தேன். இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம். பிரதமர் நலம் விசாரித்தது அதிமுகவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. புறப்படும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பிரதமர் பேசினார். வேறு யாரிடமும் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்ளவே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
-
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications