தெற்கே இருந்தவர் திராவிடர்; வடக்கே இருந்தவர் ஆரியர்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!
மதுரை: அண்மையில் திராவிடர்கள் யார் என்பது குறித்து முரசொலியும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாடம் எடுத்திருந்த நிலையில், ஆங்கிலேயர்கள் தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்ததாக தமிழக ஆளுநர் பேசியுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பங்கேற்றார். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளிப்புறத்தில் கறுப்புக்கொடியுடன் தமமுக மற்றும் சம நீதி அமைப்பு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. நீங்கள் பெற்ற இந்த பட்டம் கடுமையான உறுதியால் கிடைக்க பெற்றுள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமைய மனமார வாழ்த்துகள்.

பன்முகத்துவத்தை சிதைக்க முயற்சி
வட அமெரிக்காவை சிதைத்து போல இந்தியாவை சிதைக்க ஆங்கிலேய காலனி ஆதிக்கம் திட்டமிட்டபோது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா சீனாவை விட சமூக, பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள்.

புதிய விளக்கம்
தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தனர். ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் தேடி தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தான் கப்பல்களை வாட்டர்ப்ரூஃப் (waterproof) செய்வது குறித்து ஆங்கிலேயர்கள் கண்டுகொண்டனர். சோழர்களின் கப்பல் பயன்பாட்டு முறை வழியாகவே, ஆங்கிலேயர்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.

காமராஜர் புகழ்
காமராஜர் சிறந்த தேசியவாதி. கிராம பகுதியில் இருந்துவந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தை பார்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐ ஐ டி யை உருவாக்கியவர். அவரை நினைப்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்தியா முன்னேற்றம்
தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் தொடங்க முயற்சியுங்கள்.
இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது புதிய சாதனைகளை படைக்க நாம் உழைக்க வேண்டும். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும். 2014ல் 400 தொழில் முனைவோர் மட்டுமே இருந்தனர். தற்போது 70,000 தொழில் முனைவோரை இந்தியா உருவாக்கி உள்ளது .

மத்திய அரசின் பெருமை
நாடு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இன்று ஆண்களை விட பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி இந்தியாவை வேகமாக முன்னேற்றும். வரவுள்ள சென்சஸ் அறிக்கைபடி, ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் மாற்றம் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பர். இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது. 8 ஆண்டுகளில் பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்று தெரிவித்தார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications