இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. எப்படி இருக்கு பாருங்க.. திட்டமிட்டபடி ஜனவரியில் திறக்கப்படுமா?
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஜனவரி மாதம் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டியதோடு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் செங்கலுடன் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். இதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கை 5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படிக்க தேர்வு செய்த மாணவர்கள், தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகின்றனர். இதனிடையே அமித்ஷா மதுரை வந்த போது, முதல்வர் ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலையை பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டது.
அதேபோல் கட்டுமான பணிகள் விரைவாக முடிவடைய உள்ளதாகவும், ஜனவரி மாதம் முதற்கட்ட மருத்துவமனை வளாகம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மதுரை மக்களிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படியான சூழலில், நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்வி திமுக சார்பாக எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய அரசு தரப்பில், நவம்பர் 30ஆம் தேதி வரை ரூ.421 கோடி செலவிடப்பட்டு 42 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முழுமையான பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த புகைப்படங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரம்மாண்ட கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டடங்களில் முழுமை பெறாமல் இருக்கிறது. இன்னும் சிமெண்ட் பூசுதல், பெய்ண்ட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருக்கின்றன. இதனால் ஜனவரி மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்டம் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications