Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊரே பாராட்டும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! உள்ளூரில் மட்டும் புழுங்கும் திமுக நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் திறமைகளை கண்டு ஊரே அவரை பாராட்டி வரும் நிலையில், மதுரையில் மட்டும் அவருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் சிலர் வெடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயர் வேட்பாளரை தேர்வு செய்த விவகாரம் தான் காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி மிஸ்டர் கூலாக வலம் வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை நிதி மேலாண்மை விவகாரத்தில் பழுத்த அனுபவம் கொண்டவர். உலக பொருளாதார விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர். இதேபோல் போட்டி அரசியலில் ஆர்வம் காட்டாமல் தனக்கு தலைமை கொடுக்கும் பணிகளை மட்டும் செவ்வனே செய்யக்கூடியவர். பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்திருந்தாலும் கூட அதையெல்லாம் மறந்து இன்று தொண்டரோடு தொண்டராக மதுரையில் வலம் வரக்கூடியவர்.

எதிர்தரப்பு அதிருப்தி

எதிர்தரப்பு அதிருப்தி

ஊரே பாராட்டும் இப்படி ஒருவரை உள்ளூரில் மட்டும் அதாவது மதுரையில் அவருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளனர். மதுரை மேயராக இந்திராணி என்பவரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொண்டு வந்தது மதுரை மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், மற்றொரு அமைச்சரான மூர்த்தி தரப்புக்கும் கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இதனால் நிதியமைச்சர் பி.டி.ஆர்.மீது மனப்புழுக்கத்தில் இருந்து வருகிறது மதுரை திமுகவில் உள்ள ஒரு கோஷ்டி.

 மிஸ்டர் கூல்

மிஸ்டர் கூல்

ஆனால் இது குறித்தெல்லாம் சற்றும் அலட்டிக்கொள்ளாத நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனி ஒருவனாக, மிஸ்டர் கூலாக மதுரை திமுகவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். தனக்கென்று ஒரு தனி கோஷ்டியை உருவாக்க விரும்பாத அவர், மதுரை மாநகர வளர்ச்சித் திட்டங்களில் மட்டும் சமரசமின்றி செயல்படுகிறார்.

முதல்வர் பாராட்டு

முதல்வர் பாராட்டு

தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதனை படிப்படியாக மாற்றி வரும் பழனிவேல் தியாகராஜன், கடந்த வாரம் தமிழக பட்ஜெட்டை அனைத்து தரப்பினர் நலனையும் உள்ளடக்கிய வகையில் தாக்கல் செய்தார். இதனிடையே எனது அருமைச் சகோதரர் பிடிஆர் என முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அவரை பாராட்டியும் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+