மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிராக என் பயணம்.. ராஜ கண்ணப்பன்

Google Oneindia Tamil News

மதுரை: வாரிசு என்ற தகுதி அடிப்படையில் அதிமுகவில் சீட் வழங்கப்படுகிறது, அதிமுகவில் உள்ள இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிராக நான் பயணம் செய்கிறேன் என முன்னாள் அமைச்சர் இராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் இராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்கிறேன். ஆரணி, சங்கரன்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு பாதகம் நடக்கிறது.

Raja Kannappan slams CM and Deputy CM

ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை .. மத்திய சென்னையிலிருந்து நக்கலடித்த அன்புமணி!ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை .. மத்திய சென்னையிலிருந்து நக்கலடித்த அன்புமணி!

அதிமுகவில் முகம் தெரியாத நபர்களாக இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் உள்ளனர். மோடியின் பேச்சை கேட்டு இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் நடந்து வருகிறார்கள். திமுகவுக்கு தேர்தலில் ஆதரவு மட்டுமே. நிலைப்பாடு குறித்து தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன். ஒ.பி.எஸ் குடும்பதை காப்பற்ற மோடியுடன் கூட்டணி வைக்கப்பட்டது.

நான் எம்.பி சீட்டுக்காக அதிமுகவில் இருந்து விலகி வரவில்லை. சுயமரியாதை இல்லாததால் அதிமுகவில் இருந்து வெளியே வந்தேன். வாரிசு அடிப்படையில் அதிமுகவில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் அதிமுகவில் இருந்து வெளியே சென்று விடுவார்கள் என முதல்வர் என்னிடம் சொன்னார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு விடிவு காலமாக அமையும், பணமதிப்பு இழப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பு அரசியல் ஆக்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆளுமை இல்லாமல் உள்ளதால் ஆட்சியை மக்களால் கலையும். அதிமுகவில் பின்புலம் இல்லாததால் பல நிர்வாகிகள் அதிமுகவை எதிர்க்க முடியவில்லை.

அதிமுகவில் நியாயம் இல்லாத நிலை வந்த நேரத்தில் நான் பலமுறை அதிமுகவை எதிர்த்து உள்ளேன். கிருஷ்ணரை அவமதித்து பேசிய கி.வீரமணி பேச்சு கண்டனத்துக்கு உரியது. அதிமுகவில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா பெயரை வைத்து தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் நான் நீண்ட பயணம் செய்து உள்ளேன்.

அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளை நான் கேட்காமல் இருக்க முடியாது. ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் அவரின் மகனுக்கு நான் வாக்கு சேகரிக்கமால் இருக்க முடியாது. மே 23 ஆம் தேதி தமிழகத்தில் யாருக்கு ஆதரவு உள்ளது என தெரியவரும். எனக்கு தைரியம் உள்ளதால் அதிமுகவை எதிர்த்து வருகிறேன். எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் அதிமுகவில் உள்ளனர்.

என் பயணம் அதிமுகவில் உள்ள இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிரானது. சுய நலத்துடன் எம்.பி சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் வசம் இரட்டை இலை சின்னம் இருக்காது. அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். அதிமுக பாஜகவுக்கு அதிகமான எம்.பி இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது" என தெரிவித்தார்.

English summary
Former ADMK Minister Raja Kannappan has blasted CM EPS and Deputy CM OPS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X