மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா? மீண்டும் இன்ஸ்டாவில் பதிவு..விளக்கமளித்த சித்தார்த்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக இன்ஸ்டாவில் நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அங்கு நடந்த சம்பவம் இதுதான் என நடிகர் சித்தார்த் இன்று மீண்டும் இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக நடிகர் சித்தார்த் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.
சித்தார்த்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இது தொடரபாக தனது தர்ப்பு விளக்கத்தை மீண்டும் அளித்து இருக்கிறார் சித்தார்த். சித்தார்த் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆதார் கார்டை சோதனை செய்தார்
விமான நிலைய சம்பவத்திற்கு பிறகு என்னிடம் பலரும் இது தொடர்பாக பேசி வருகின்றனர். ஊடகங்களும் என்னை தொடர்பு கொண்டன. எனவே எனது தரப்பு கருத்தை மீண்டும் முன் வைக்கிறேன். எனது குடும்பத்தினருடன் நான் மதுரை சென்று இருந்தேன். விமான நிலையத்தில் அந்த சமயத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. அங்கு இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார்.

ஏன் அப்படி கேட்டார்
என் முகத்தில் இருந்து முகக்கவசத்தை இறக்கிய பிறகு மீண்டும் மூன்று முறை சோதனை செய்தார். நான் கேள்வி எழுப்பிய போது இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் தற்போது இருப்பது போலத்தான் புகைப்படத்திலும் எனது முகம் இருந்தது. ஆனால் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. அதோடு விடாமல் எனது ஏர்பேட் மற்றும் செல்போனை சோதனை செய்து அருகில் உள்ள டிரேவில் தூக்கி போட்டார்.

கைப்பையில் இருந்த சில்லறைகளை எடுத்தனர்
நான் இப்படி போடுவதால் எனது எல்க்ட்ரானிக் உபகரணங்கள் பலமுறை தொலைந்து இருப்பதாக கூறினேன். ஆனால், மதுரை விமான நிலையத்தில் இதுதன் விதி என்று என்னிடம் கூறினார். எனது அம்மாவின் கைப்பையில் இருந்த சில்லறைகளை எடுத்தனர். இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்த போதும் கண்டு கொள்ளவில்லை. எனது சகோதரியின் பையில் இருந்த மருந்து பொருட்களை பார்த்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி ஒருவர் எதற்காக இதை எடுத்து செல்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை
அதன்பிறகு நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அங்கே வந்த ஒரு அதிகாரி என்னை அடையாளம் கண்டு கொண்டு, நான் உங்கள் ரசிகர் இங்கே நடந்தவைகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்றார். பொதுமக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா.. பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்... என்று அவரிடம் சொன்னேன். நான் அடிக்கடி விமான நிலையத்தில் பயணம் செய்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை.

இதை தான் எதிர்பார்த்தேன்
சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் நடந்து கொண்ட விதம் என்னை அச்சுறுத்தியது. விமான நிலையத்தை பாதுகாக்கும் பணி கடினமானது அதை யாரும் மறுக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் அமைப்புகள் சிதைந்துவிட்டதால் நடப்பது இல்லை. தனிநபரின் மோசமான நாளாக இருந்து அதை மற்றவர் மீது காட்டுவதாகக் கூட இருக்கலாம். வயதானவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications