மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

900 கி.மீ.. 18 நாள்கள் தொடர்ந்து நடந்து வந்த ரசிகர்.. வியந்துபோன அக்ஷய் குமார் கொடுத்த மதிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் அக்ஷய் குமாரை பார்க்க குஜராத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் தூரம் நடந்து மும்பை வந்துள்ளார் சுமார் 18 நாள்கள் தொடர்ந்து நடந்து வந்து அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார்.

பாலிவுட் டாப் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக 2.0 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஏர்லிப்ட், கப்பார் இஸ் பேக், ஸ்பெஷல் 26, சிங் இஸ் கிங், நமஸ்தே லண்டன், ஹவுஸ்ஃபுல், ரவுடி ராத்தோர், ஒஎம்ஜி, பேட்-மேன், ஹீரா பேரி, காலிடே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமாருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

akshay kumar response to fan effort, he walked 900 kilometers from dwarka to mumbai

இந்நிலையில் அக்ஷய் குமாரின் ரசிகர் ஒருவர் பார்பட் என்பவர், குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரிலிருந்து மும்பைக்கு 900 கி.மீ நடந்து சென்று உள்ளார். சுமார் 18 நாள்கள் நடந்து சென்ற பார்பட், அக்ஷய் குமாரின் வீட்டை தேடி கண்டுபிடித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த அக்ஷய் குமார் அவரை அழைத்து பேசியதுடன் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்ஷய் குமார், பார்பட் என்பவரை இன்று நான் சந்தித்தேன். அவர், 900 கி.மீ நடந்து வந்து 18 நாள்களில் மும்பையை அடைந்துள்ளார். நமது இளைஞர்கள் லட்சியங்களை அடைய இதுபோன்ற திட்டங்களுடன் செயல்பட்டால் யாரும் தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

அக்ஷய் குமார், தனது இன்னொரு பதிவில், உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு சந்தோஷமான விஷயம் தான். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை தயவு செய்து செய்ய வேண்டாம் என்பதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்... உங்கள் நேரத்தையும் சக்தியையும் உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பயன்படுத்துங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சியை தரும். பார்பட்டுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

English summary
akshay kumar response to fan effort, who walked 900 kilometers from dwarka to mumbai. but akshay request to please not do these things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X