ரிஷப் பண்டிற்கு மட்டும் இல்லை..கொரோனா காலத்தில் பெரிதும் உதவிய பேருந்து ஓட்டுநர்..வெளியான புது தகவல்
மும்பை: சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டிற்கு தக்க நேரத்தில் உதவி செய்த அரசுப்பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார், ஏற்கனவே கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவி செய்ததாக புது தகவல் வெளியாகி இருக்கிறது. ஆபத்தில் சுஷில் குமார் உதவும் மனப்பான்மை கொண்டவர் என அப்பகுதி மக்கள் பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கிக்கு தனது சொகுசு காரில் ரிஷப் பண்ட் சென்றுள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் ரிஷப் பண்டின் கார் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த டிவைடரில் கார் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீ பிடித்து எரிந்தது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் விபத்துள்ளானதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், ரிஷப் பண்டிற்கு கால் மூட்டு, கை, முதுகுப்பகுதிகளில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான சிகிச்சை செலவை ஏற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

உதவிய பேருந்து டிரைவர்
இதற்கிடையே, ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காரில் இருந்து வெளிவர முடியாமல் தவித்த போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார் சற்றும் தாமதிக்காமல் உதவிக்கரம் நீட்டினார். உதவி அளித்த பேருந்து ஓட்டுநர் சுஷில் குமாருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, ரிஷப் பண்டிற்கு உதவியது குறித்து பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார் கூறியதாவது:- ஹரியானா மாநில அரசு பேருந்து ஓட்டுநராக நான் இருக்கிறேன்.

காரை நோக்கி வேகமாக ஓடினோம்
சம்பவத்தன்று அதிகாலை 4.15 மணிக்கு ஹரித்துவாரில் இருந்து பஸ் புறப்பட்டது. செல்லும் வழியில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு, எதிர்முனையில் உள்ள டெல்லிக்கு செல்லும் சாலையில் நிலைதடுமாறி நின்றதை பார்த்தேன். உடனே பஸ்சை நிறுத்தி விட்டு, நானும் கண்டக்டர் பரம்ஜீத்தும் காரை நோக்கி வேகமாக ஓடினோம். அதற்குள் காரில் இருந்து தீப்பொறி கிளம்பியது. காரும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது மேலும் சில பயணிகள் ஓடி வந்தனர்.

கொஞ்சம் தாமதித்து இருந்தால்..
நாங்கள் காரில் இருந்து டிரைவரை (ரிஷப் பண்ட்) பத்திரமாக மீட்டோம். உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆம்புலன்சுக்கும் போன் செய்தோம். நான் மட்டும் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் கார் வெடித்து இருக்கும். நான் நெடுஞ்சாலையில் தான் வாழ்கிறேன். நான் உதவி செய்யாவிட்டால் பிறகு யார்தான் செய்வார்கள்? எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை என்பதால் அவர் கிரிக்கெட் வீரர் என்பது எனக்குத்தெரியாது. அருகில் இருந்த கண்டக்டர் தான், கிரிக்கெட் வீரர் என்பதை அடையாளம் கண்டு கூறினார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில்..
42-வயதான சுஷில் குமார் இப்படி உதவிக்கரம் நீட்டுவது இது முதல் முறை கிடையாது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் நடந்தே சொந்த ஊருக்கு சென்றனர். அப்போது தொலைதூரத்தில் இருந்து நடந்தே வந்த மக்கள் பலரையும் வாகனத்தில் ஏற்றி உதவி அளித்து இருக்கிறார். சுஷில் குமாரின் மனிதநேயமிக்க செயல்களை அப்பகுதி மக்கள் பாராட்டி பேசி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications