மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்றனும்! இல்லாவிட்டால் இதுதான் நடக்கும்! ராஜ்தாக்கரே எச்சரிக்கை!
மும்பை: ‛‛மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்'' என மகாராஷ்டிரா நவநிர்மான சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர நவநிர்மாண சேனாவின்(MNS) தலைவர் ராஜ்தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒலிபெருக்கியை அகற்றுங்கள்
மசூதிகளில் ஒலிபெருக்கிகள்(Loud Speakers) ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன?. இதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கி வைக்கப்பட்டு அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும். நான் பிரார்த்தனை அல்லது குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானவன் அல்ல. நான் எனது மதத்தால் பெருமைப்படுகிறேன்.

சோதனைக்கு வேண்டுகோள்
மசூதிகளில் சோதனை மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகிறேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வசித்து வரும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். எம்எல்ஏக்கள் வாக்கு வங்கிக்காக அமைதி காக்கின்றனர். ஆதார் அட்டை இல்லாதவர்களை கூட ஓட்டளிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் அடையாள அட்டைகள் வழங்குகின்றனர்.

உத்தவ் தாக்கரே மீது விமர்சனம்
2019 தேர்தலின்போது பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிசை முதல்வராக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் முடிவு செய்தனர். தனது ஆதரவின்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் வெளியே வந்து முதல்வராகி உள்ளார்.

ஜாதிவெறி அதிகமாகி உள்ளது
தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஜாதிவெறியை அதிகப்படுத்தியுள்ளார். ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்துள்ளார். சாதி அரசியலில் இருந்து வெளியேறாவிட்டால் நாம் எப்படி இந்துவாக இருப்போம். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நான் பாராட்டுகிறேன். மகாராஷ்டிராவிலும் அதே வளர்ச்சியை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் அயோத்திக்கு செல்வேன். இந்துத்துவா பற்றியும் பேசுவேன்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications