மாற்றுத்திறனாளி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 17 பேரின் டிஎன்ஏவை டெஸ்ட் செய்ததில்.. சிக்கிய தந்தை!
மும்பை: காத கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க 17 பேரின் டிஎன்ஏ-வை பரிசோதித்ததில், இளம்பெண்ணின் தந்தையினுடைய டிஎன்ஏ பொருந்தியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பையின் கஃப் பரேட் பகுதி சேர்ந்த இந்த இளம்பெண், உடல் நல கோளாறு இருப்பதாக தனது பாட்டிக்கு சைகை மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக வயிற்றில் ஏதோ புழு போன்று ஊர்வதாக தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

பரிசோதனையில் இளம் பெண், 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இளம்பெண் மாற்றுத்திறனாளி என்பதால் ஆரம்பத்தில் தகவல் பரிமாற்றத்தில் போலீசாரருக்கு சிக்கல் ஏற்பட்டது. மட்டுமல்லாது, பயம் காரணமாக இளம் பெண் எதையும் கூற முன்வரவில்லை.
தந்தையிடம் இது குறித்து விசாரித்த போது, அவரும் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் காவல்துறை புகார் எதுவும் அளிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து இளம் பெண்ணுக்கு, முறையான ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து இளம்பெண் பேச முன் வந்தார்.
இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் இளம் பெண்ணின் தந்தை உட்பட 17 நபர்களை அடையாளம் கண்டனர். அதில் ஒரு சிறுவனும் அடங்குவார். குற்றவாளிகளை துல்லியமாக கண்டறிய, போலீசார் இளம் பெண்ணின் தந்தை உட்பட 17 சந்தேக நபர்களின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
இளம்பெண்ணின் கருவின் மரபணுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, தந்தையினுடைய மரபணு கருடன் முற்றிலும் பொருந்திப் போனது. இதனையடுத்து காவல்துறையினர் அவரது தந்தையை கைது செய்திருக்கின்றனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications