Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி.. யாகூப் மேனனுக்கு கல்லறையா? எதிர்க்கட்சிகள் மீது பாயும் ஷிண்டே

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாகூப் மேனன், கடந்த 2015ல் நாக்பூர் சிறையில் தூக்கில் இடப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு அங்குள்ள முஸ்லிம்கள் கல்லறையில் (கபரிஸ்தான்) அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் மேலெழுந்தன. இது குறித்து அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணி அரசு முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு

தொடர் குண்டு வெடிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் மார்ச் 12 அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. சுமார் 12 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல். இது சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி சார்பில் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் யாகூப் மேனன் கைது செய்யப்பட்டு கடந்த 2015ல் நாக்பூர் சிறையில் தூக்கில் இடப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு அங்குள்ள முஸ்லிம்கள் கல்லறையில் (கபரிஸ்தான்) அடக்கம் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு என்சிபி-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) அரசை பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கல்லறைக்கு மேல் நினைவிடம் கட்ட முன்னாள் மகா விகாஸ் அகாடி அரசுதான் அனுமதி வழங்கியதாக பாஜக சார்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் பேட்டி

முதலமைச்சர் பேட்டி

இது தொடர்பான விவாதங்கள் மேலெழுந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விளக்குகள் அகற்றம்

விளக்குகள் அகற்றம்

"கல்லறையை அழகுபடுத்துவது முந்தைய தாக்கரே அரசாங்கத்தின் போது நடந்தது. முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. கூட்டணி கட்சிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க இதுபோன்ற செயல்களை அவர் செய்திருக்கலாம்" என்று பவான்குலே கூறியுள்ளார். கல்லறையில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டபோது காவல்துறையினர் தலையிட்டு விளக்குகளை அகற்றினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு

குற்றச்சாட்டுக்கு மறுப்பு

எங்களுக்கு எதிராக பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கிரானைட் மற்றும் மார்பிள் உதவியுடன் கல்லறையை அழகுபடுத்தும் பணி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது என்றும் சிவசேனா தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அம்பாதாஸ் தன்வே இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+