நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாகை கிராமங்களில் என்ன நடக்கிறது.. இதோ ஒரு சாம்பிள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இழுத்து போட்டு வேலை செய்யும் நல்லுள்ளம்-வீடியோ

    நாகப்பட்டனம்: கஜா புயல் சூறையாடி விட்டுப் போயுள்ள நாகப்பட்டனம் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல ஊர்களை புயல் புரட்டிப் போட்டுப் போயுள்ளது.

    மின் கம்பங்கள்தான் முதல் இலக்கு. பயிர்ச் சேதம் மறுபக்கம். இதுதவிர குடிசை வீடுகள், மரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. நகர்ப்புறங்களில்தான் சேதம் அதிகம் என்றில்லை. கிராமங்கள் சந்தித்துள்ள சேதம் மிகப் பெரியது என்கிறார்கள்.

    பெரும்பாலான கிராமங்களில் மின்சார வசதி கிடைக்க சில நாட்கள் ஆகும் என்கிறார்கள். அந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாம். பெரிய பெரிய மரங்கள் விழுந்து விட்டன.

    கரண்ட் கம்பியை உயர்த்தி உயர்த்தி.. சபாஷ் கண்டக்டர்.. வாழ்த்திய பயணிகள்.. வேதாரண்யத்தில் பலே சம்பவம்!கரண்ட் கம்பியை உயர்த்தி உயர்த்தி.. சபாஷ் கண்டக்டர்.. வாழ்த்திய பயணிகள்.. வேதாரண்யத்தில் பலே சம்பவம்!

    புயல் கடந்த நாகை மாவட்டம்

    புயல் கடந்த நாகை மாவட்டம்

    நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகேதான் புயல் கரையைக் கடந்தது. இதனால் இந்த மாவட்டத்தில்தான் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்கள்.

    கிராமப்புறங்களில் சேதம்

    கிராமப்புறங்களில் சேதம்

    கிராமப் புறங்களில் மரங்கள் விழுந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வயல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. வீடுகளின் கூரைகள் பிய்த்துக் கொண்டு போயுள்ளன. தென்னை, வாழை போன்றவை பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

    மீட்புப் பணிக்கு ஆள் இல்லை

    மீட்புப் பணிக்கு ஆள் இல்லை

    பெரும்பாலான கிராமங்களில் கிராம மக்களே மரங்களை அகற்றும் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். யாரையும் எதிர்பாராமல் அவர்களே இறங்கி விட்டனர். மேலும் கிராமங்களுக்கு தொலைத் தொடர்பு வசதியும் முற்றிலும் இல்லாமல் போயுள்ளதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது.

    மீள நாட்களாகும்

    மீள நாட்களாகும்

    கிராமப் புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்து அவை மீண்டு வர சில நாட்களாகும் என்று தெரிகிறது. இப்போதைக்கு மின்சாரத்தை மட்டும் உடனடியாக கொடுக்க ஏற்பாடு செய்தால் போதும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

    செய்தி + படம்: தீபக் சங்கர், தஞ்சாவூர்

    English summary
    Cyclone Gaja has hit the Nagai villages worsely and villagers are waiting for the relief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X