50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்.. பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்!
நியூயார்க்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை நெருங்கி வரும் வால்நட்சத்திரம் ஒன்று வரும் பிப்ரவரி 1ம் தேதி பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்திருக்கிறது.
பொதுவாக வால் நட்சத்திரங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஊர்ட் மேகக்கூட்டங்களுக்கு நடுவே உருவாகிறது. அங்கிருந்து புறப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்கிறது. ஒவ்வொரு வால்நட்சத்திரமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். சில நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும்போது அதன் வெப்பத்தால் முற்றிலுமாக கரைந்து சூரியனோடு ஒன்றிணைந்துவிடும். சில நட்சத்திரங்கள் சூரியனை சுற்றிவிட்டு மீண்டும் ஊர்ட் மேகக்கூட்டங்களுக்கு சென்றுவிடும்.
பூமியை பொறுத்த அளவில் ஹேலி வால்நட்சத்திரம்தான் மிகவும் பிரபலமானதாகும். இந்த நட்சத்திரம் ஒவ்வொரு 75-79 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும். இந்த நட்சத்திரம் தெளிவாக தெரியும். அதேபோல தற்போது மற்றொரு வால்நட்சத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வால்நட்சத்திரம் ஹேலி வால் நட்சத்திரத்தை போல் அல்லாமல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை நெருங்கி வரும்.

ஆய்வு
கடந்த ஆண்டு கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் வானியல் ஆய்வாளர்கள் வானத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது வியாழன் கிரகத்தை ஓரு சிறு கோள் சுற்றி வருவதை பார்த்துள்ளனர். முதலில் இதனை சிறு கோள்கள் என்றுதான் கணித்தார்கள். ஆனால் அது செவ்வாய் கிரகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதனை எதிர்பார்க்காத ஆய்வாளர்கள் அந்த சிறு கோளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் இது சிறு கோள் அல்ல இது ஒரு வால் நட்சத்திரம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு C/2022 E3 (ZTF) என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை
இது குறித்து மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வால் நட்சத்திரம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். அப்போது பூமிக்கு நெருக்கமாக வரும். ஊர்ட் மேகக் கூட்டத்திலிருந்து இந்த நட்சத்திரம் புறப்பட்டு சூரியனை நோக்கி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 2ம் தேதியன்று பூமிக்கு அருகே சுமார் 42 கோடி கி.மீ தொலைவுக்கு வரும். இதனுடைய வால்பகுதி மட்டும் சுமார் 1 கி.மீ நீளத்திற்கு இருக்கும். பச்சை நிறத்தில் ஓரளவு பிரகாசத்துடன் இருப்பதால் இதனை பைனாக்குலார் கொண்டு பார்க்கலாம். வெறும் கண்ணால் இதனை பார்க்க வேண்டும் எனில் ஒளி மாசு குறைவாக உள்ள பகுதியிலிருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பிருக்கிறது.

யாருக்கெல்லாம் தெரியும்
பூமியின் தென் அரைக்கோளம் மற்றும் வட அரைக்கோளத்தில் உள்ள மக்களுக்கு ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி தொடக்கத்திலும் இந்த வால் நட்சத்திரம் தெரியும். மாலை வானத்தில் பொலாரிஸ் எனப்படும் துருவ நட்சத்திரத்தையொட்டி இந்த வால்நட்சத்திரத்தை காணலாம். ஆனால் இந்த நட்சத்திரத்தின் பிரகாசத்தை உறுதியாக சொல்ல முடியாது. எனவே வெறும் கண்களால் பார்க்க முடியுமா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது" என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னையை பொறுத்த அளவில் ஒளி மாசு அதிகம் இருப்பதால் இதனை வெறும் கண்களால் காண்பது சிரமமாக இருக்கலாம்.

சென்னை
எனவே வேலூரை அடுத்து உள்ள பகுதிகளில் ஓரளவு ஒளி மாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து இந்த வால்நட்சத்திரத்தை தெளிவாக பார்க்க முடியும். வேலூரை அடுத்துள்ள திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்திருக்கும் காவலூர் கிராமத்தில் 'வைனு பாப்பு' வானியல் ஆய்வகம் இருக்கிறது. இந்த ஆய்வகத்தில் அமைந்துள்ள பகுதியிலிருந்து பார்த்தால் வால்நட்சத்திரத்தை தெளிவாக பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications