லேசா எடுத்துக்காதீங்க.. இப்போதான் கவனமா இருக்கணும்! பிடனுக்கு சிஐஏ திடீர் வார்னிங்! பதறும் அமெரிக்கா
நியூயார்க்: சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க அதிபர் பிடனுக்கு முக்கியமான வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளார். ரஷ்யா பற்றி மட்டும் இன்றி உலக நாடுகளுக்கே அவர் முக்கியமான வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளார்.
உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதுவரை ரஷ்யாவால் உக்ரைனின் பெரிய நகரம் எதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
உக்ரைன் நகரங்கள் பலவற்றில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன. இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவே மேற்கு உலக நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இப்போதுதான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிஐஏ எச்சரிக்கை
இது தொடர்பாக சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க அதிபர் பிடனுக்கு அளித்துள்ள எச்சரிக்கையில், ரஷ்யாவை அமெரிக்கா குறைத்து எடை போடக் கூடாது. ரஷ்ய அதிபர் புடின் ஏக்கத்தோடு இருக்கிறார். உக்ரைனில் வெற்றிபெற முடியவில்லை என்ற ஏக்கத்துடன் இருக்கிறார் புடின். உக்ரைனில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் பின்னடைவிலிருந்து மீளும் வகையில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

புடின் பிளான்
முக்கியமாக சிறிய அளவிலான டாக்டிக்கல் அணு ஆயுதங்களை, குட்டி அணு ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இது உக்ரைனுக்கு மட்டும் பிரச்சனை இல்லை. சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கே பிரச்சனை. அமெரிக்க அதிபர் புடின் இதை லேசாக எடுத்துக்கொள்ள கூடாது.

அணு ஆயுதம்
ஆனால் ரஷ்யா இதுவரை அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதற்கான மூவ்மென்ட் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் ரஷ்ய அரசாங்கம் இது தொடர்பான எச்சரிக்கைகளை மட்டுமே விடுத்து வருகிறது. ஆனால் இதுவரை அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வகையில் ரஷ்யா பெரிதாக பயிற்சிகள் எதையும் எடுக்கவில்லை.

கண்காணிக்க வேண்டும்
அதற்காக நாம் அலட்சியமாக இருக்க கூடாது. நாம் மிக மிக கவனமாக அனைத்தையும் சோதிக்க வேண்டும். சிஐஏ அமைப்பிற்கு இருக்கும் மிக முக்கியமான வேலை இப்போது அதுதான். அவர்களை நாம் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும்.

புடின் தந்திரம்
புடினின் போர் தந்திரங்கள் குறித்து நாங்கள் தொடக்கத்தில் இருந்து வெளிப்படையாக இருந்து வந்துள்ளோம். எங்களுக்கு கிடைத்த சில உளவு தகவலைகளை நாங்கள் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறோம். இதனால் புடின் பெரிய அளவில் தந்திரங்களை மேற்கொள்ள முடியவில்லை என்று சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications